VAIKASI NILAVE
வைகாசி நிலவே
Movie: Unnale unnale
Singers: Haricharan, madhusree
Music director: Harris jayaraj
ஆண்: வைகாசி நிலவே வைகாசி நிலவே..
மை பூசி வைத்திருக்கும் கண்ணில் நீ
பொய் பூசி வைத்திருப்பதென்ன..
பெண்: வெட்கத்தை உடைத்தாய் கைக்குள்ளே அடைத்தாய்..
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட ..
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்..
ஆண்: விழியில் இரண்டு விலங்கு இருக்கு..
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு..
என் ஜீவன் வாழும் வரை..
ஓ என் செய்வாய் நாளும் எனை..
வைகாசி நிலவே வைகாசி நிலவே..
மை பூசி வைத்திருக்கும் கண்ணில் நீ
பொய் பூசி வைத்திருப்பதென்ன..
ஆண்: தூவானம் என தூரல்கள் விழ..
தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே..
பெண்: கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு..
காதல் கை கூடட்டும்..
ஆண்: இதோ எனக்காக விரிந்தது இதழ் எடுக்கவா தேனே..
பெண்: கனி எதற்காக கனிந்தது அணில் கடித்திட தானே..
ஆண்: ஓ காலம் நேரம் பார்த்து கொண்டா காற்றும் பூவும் காதல் செய்யும்..
வைகாசி நிலவே வைகாசி நிலவே..
மை பூசி வைத்திருக்கும் கண்ணில்
நீ பொய் பூசி வைத்திருப்பதென்ன..
பெண்: வெட்கத்தை உடைத்தாய் கைக்குள்ளே அடைத்தாய்..
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட ..
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்..
ஆண்: நூலாடை என மேலாடை என..
பாலாடை மேனி மீது படரட்டுமா..
பெண்: நான் என்ன சொல்ல நீ என்னை மெல்ல..
தீண்டி தீ வைக்கிறாய்..
ஆண்: அனல் கொதித்தாலும் அணைத்திடும் புனல் அருகினில் உண்டு..
பெண்: அணை நெருப்பாக இருக்கையில் என்னை தவிப்பது கண்டு..
ஆண்: ஓ மோகத்தீயும் தேகத்தீயும் தீர்த்தம் வார்த்து தீராதம்மா..
வைகாசி நிலவே வைகாசி நிலவே..
மை பூசி வைத்திருக்கும் கண்ணில் நீ
பொய் பூசி வைத்திருப்பதென்ன..
பெண்: ஓ வெட்கத்தை உடைத்தாய் கைக்குள்ளே அடைத்தாய்..
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட ..
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்..
ஆண்: விழியில் இரண்டு விலங்கு இருக்கு..
பெண்: அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு..
என் ஜீவன் வாழும் வரை..
ஓ என் செய்வாய் நாளும் எனை..
என் ஜீவன் வாழும் வரை..
ஓ என் செய்வாய் நாளும் எனை..
..........................
Songs lyrics from unnale unnale movie:
