ELAY NERAM VANDHUDUCHU

 ஏலே நேரம் வந்திடுச்சு

 

Movie: Sakkarakatti  

Singers: Krish,  Naresh Iyer 

Music director: A.R.Rahman 

ஏலே நேரம் வந்திடுச்சு ஏலே..
உலகம் காத்திருக்கு வாலே..
கதவை திறந்து போலே..
புதையல் பங்கு போடவா..போடவா..

ஏலே நேரம் வந்திடுச்சு ஏலே..
உலகம் காத்திருக்கு வாலே..
கதவை திறந்து போலே..
புதையல் பங்கு போடவா..

வாழ்க்கை என்னும் கேமராவில் நாம்..
வாழ்க்கை என்னும் கேமராவில் நாம்..
புன்னகை மட்டும் புகைப்படம் எடுப்போம்..
வலிகளையெல்லாம் பிளாஷில் போட்டு ரிஃப்ரெஷ் பண்ணி தினம் தினம் சிரிப்போம்..
ஏலே ஏலே ஏலே மொட்டை மாடி மேல ஏறி ஏலே..
டெலஸ்கோப்பை வெச்சு பாக்க வாலே..
கேலக்ஸியில் குதிக்கலாம் மேலே..
சயின்சை கலக்கிட வா..

டைம் மிஷினில் ஏறி சென்று நாமும் ஹிரோஷிமா யுத்த அழிவை தடுப்போம்.. 
ஹிட்லர் ப்ரெயினை சர்ஜரி செய்து அங்கே குண்டுக்கு பதிலாய் பூக்கள் எடுத்து வைப்போம்..
சார்லி சாப்ளினுக்கு தமிழ் சொல்லி தருவோம்..
ம்ம் ம்ம் மசமசனு வளர்ந்துவிட்டோம்..
ம்ம் ம்ம் மசமசனு வளர்ந்துவிட்டோம்..
ம்ம் ம்ம் மசமசனு வளர்ந்துவிட்டோம்..

ஏலே ஏலே  நேரம் வந்திடுச்சு ஏலே..
உலகம் காத்திருக்கு வாலே..
கதவை திறந்து போலே..
புதையல் பங்கு போடவா..போடவா..
ஏலே மொட்டை மாடி மேல ஏறி ஏலே..
டெலஸ்கோப்பை வெச்சு பாக்க வாலே.. 
கேலக்ஸியில் குதிக்கலாம் மேலே.. 
சயின்சை கலக்கிட வா..

மழை மேகம் எங்கே
அதை தேடி நாம் விரட்டி சென்று பிடித்திடுவோம்..
மரம் கோடி வைத்து..
மழை வந்தால் வருக வருக என்று வரவேற்போம்..
ஆன்டனாவில் அமரும் பறவை அழைத்து..
வீட்டில் வந்து கூடு கட்ட சொல்வோம்..

ஏலே மொட்டை மாடி மேல ஏறி ஏலே..
டெலஸ்கோப்பை வெச்சு பாக்க வாலே..
கேலக்ஸியில் குதிக்கலாம் மேலே 
சயின்சை கலக்கிட வா

காற்றின் முகத்தில் கரியை பூச வேண்டாம்..
காரை விட்டு சைக்கிள் வாங்கி பறப்போம்..
கருப்பு கலரில் விஷ கோலா வேண்டாம்..
கரும்பு ஜூசு இளநீர் வாங்கி குடிப்போம்..
டௌரி மாப்பிள்ளைக்கு காதல் சொல்லி தருவோம்..

ஏலே நேரம் வந்திடுச்சு ஏலே..
உலகம் காத்திருக்கு வாலே..
கதவை திறந்து போலே..
புதையல் பங்கு போடவா..போடவா..
   
ஏலே US-க்கு போக வேண்டாம் ஏலே..
கான்சுலேட்டில் நிக்க வேண்டாம் வாலே..
காதலிக்க விசா வேணாம் ஏலே..
காதல் ஸ்டேஷன் வந்திருச்சு வா..