ORU CHINNA THAMARAI
ஒரு சின்ன தாமரை
Movie: Vettaikaran
Singers: Krish, dinesh kanagarathnam, Suchithra
Music director: Vijay Antony
ஆண்: ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே..
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே..
இதை உண்மை என்பதா..
இல்லை பொய் தான் என்பதா..
என் தேகம் முழுவதும் ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே..
பெண்: என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே..
உன் ஈர புன்னகை சுடுதே..
என் காட்டு பாதையில் நீ ஒற்றை பூவடா..
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் உயிரே..
ஆண்: ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே..
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே..
ஆண் : உன் பெயர் கேட்டாலே அடி பாறையில் பூப்பூக்கும்..
உன் காலடி தீண்டிய வார்த்தைகள் எல்லாம் கவிதைகளாய் மாறும்..
பெண்: உன் தெரு பார்த்தாலே என் கண்கள் அலை மோதும்..
உன் வாசல் தேடி போக சொல்லி கெஞ்சுது என் பாதம்..
ஆண்: என் வாழ்க்கை வரலாற்றில்..
எல்லாமே உன் பக்கங்கள்..
பெண்: உன்னாலே என் வீட்டின்..
சுவரெல்லாம் ஜன்னல்கள்..
ஆண்: ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே..
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே..
ஆண்: உன் குரல் கேட்டாலே அந்த குயில்களுக்கும் கூசும்..
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள் மட்டும் மோட்சத்திலே சேரும்..
பெண்: அனுமதி கேட்காமல் உன் கண்கள் எனை மேயும்..
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம் நொடியில் குடை சாயும்..
ஆண்: உன் கைகள் கோர்க்காமல்..
பயணங்கள் கிடையாது..
பெண்: உன்னோடு வந்தாலே..
சாலைகள் முடியாது..
ஆண்: ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே..
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே..
இதை உண்மை என்பதா..
இல்லை பொய் தான் என்பதா..
என் தேகம் முழுவதும் ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே..
பெண்: என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே..
உன் ஈர புன்னகை சுடுதே..
என் காட்டு பாதையில் நீ ஒற்றை பூவடா..
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் உயிரே..
ஆண்: ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே..
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே..
..........................
Song lyrics from Vettaikaran movie: