KARIGALAN KAALA POLA
கரிகாலன் கால போல
Movie: Vettaikaran
Singers: suchith suresan, sangeetha rajeshwaran
Music director: Vijay Antony
ஆண்: கரிகாலன் கால போல கருத்திருக்குது குழலு..
பெண்: குழலில்ல குழலில்ல..
தாஜுமஹால் நிழலு..
ஆண்: சேவலோட கொண்ட போல செவந்திருக்குது ஒதடு..
பெண்: ஒதடில்ல ஒதடில்ல..
மந்திரிச்ச தகடு..
ஆண் : ஏ பருத்தி பூவப்போல பதியுது உன் பாதம்..
பெண்: பாதம் இல்ல பாதம் இல்ல.. பச்சரிசி சாதம்..
ஆண்: ஏ வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து..
பெண்:கழுத்தில்ல கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்து..
ஆண்: கரிகாலன் கால போல கருத்திருக்குது கொழலு..
பெண்: கொழலில்ல கொழலில்ல..
தாஜுமஹால் நெழலு..
ஆண்: சேவலோட கொண்ட போல செவந்திருக்குது ஒதடு..
பெண்: ஒதடில்ல ஒதடில்ல..
மந்திரிச்ச தகடு..
ஆண்: ஏ பால வளைவு போல உள்ளதடி மூக்கு..
பெண்: மூக்கு இல்ல மூக்கு இல்ல.. முந்திரி முந்திரி கேக்கு..
ஆண்: ஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கன்னம்..
பெண்: கன்னம் இல்ல கன்னம் இல்ல.. வெள்ளி வெள்ளி கிண்ணம்..
ஆண்: மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்..
பெண்: தேகம் இல்ல தேகம் இல்ல.. தீ புடிச்ச மேகம்..
ஆண்: மாராப்பு பந்தலிலே மறைச்சு வச்ச சோல..
பெண்: சோலையில்ல சோலையில்ல ஜல்லிக்கட்டு காள..
ஆண்: கரிகாலன் கால போல கருத்திருக்குது குழலு..
பெண்: குழலில்ல குழலில்ல..
தாஜுமஹால் நெழலு..
ஆண்: சேவலோட கொண்ட போல செவந்திருக்குது ஒதடு..
பெண்: உதடில்ல உதடில்ல..
மந்திரிச்ச தகடு..
ஆண்: கண்டவுடன் வெட்டுதடி கத்தரிகோலு கண்ணு..
பெண்: கண்ணு இல்ல கண்ணு இல்ல.. கெறங்கடிக்கிற ஜின்னு..
ஆண்: பத்த வச்ச மத்தாப்பு போல் மினுமினுக்குது பல்லு..
பெண்: பல்லு இல்ல பல்லு இல்ல.. பதிச்ச வைர கல்லு..
ஆண்: சுருக்கு பைய போல் இருக்கு இடுப்பு..
பெண்: இடுப்பில்ல இடுப்பு இல்ல இந்திரன் படைப்பு..
ஆண்: கண்ணு பட போகுதுன்னு கன்னத்துல மச்சம்..
பெண்: மச்சம் இல்ல மச்சம் இல்ல.. நீ விட்டு வச்ச மிச்சம்..