VAARAYO VAARAYO

 வாராயோ வாராயோ




Movie: Aadhavan 

Singers: P.Unni krishnan,  Chinmayi 

Music director: Harris jayaraj 


பெண்: வாராயோ வாராயோ காதல் கொள்ள..
பூவோடு பேசாத காற்று இல்ல..
ஏன் இந்த காதலும் நேற்று இல்ல..
நீயே சொல் மனமே..

ஆண்: வாராயோ வாராயோ மோனாலிசா..
பேசாமல் பேசுதே கண்கள் லேசா..
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா..
என்னோடு வா தினமே..
என்னோடு வா தினமே..

பெண்: இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்..
உன் கையின் காம்பில் பூ நான்..
நம் காதல் யாவும் தேன்தான்..

ஆண்: பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்..
மனம் காற்றை போல ஓடும்..
உன்னை காதல் கண்கள் தேடும்..

பெண்: ஓ..லை லை லை லை காதல் லீலை..
செய் செய் செய் செய் காலை மாலை..

ஆண்: உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்..
இவனுடன் சேர்ந்தாடு சின்ட்ரெல்லா..

பெண்: வாராயோ வாராயோ காதல் கொள்ள..
பூவோடு பேசாத காற்று இல்ல..
ஏன் இந்த காதலும் நேற்று இல்ல..
நீயே சொல் மனமே..
நீயே சொல் மனமே..

ஆண்: நீயே நீயே அந்த ஜூலியட்டின் சாயல்..
உன் தேகம் எந்தன் கூடல்..
இனி தேவை இல்லை ஊடல்..

பெண்: தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே..
எனை முத்தமிடுவாயே..
இதழ் முத்து குளிப்பாயே..

ஆண்: நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி..
வா வா வா வா என் காதல் ஜோடி..

பெண்: நான் முதன்முதலாய் எழுதிய காதல் இசை..
அதற்கொரு ஆதார சுதி நீ..

ஆண்: வாராயோ வாராயோ மோனாலிசா..
பேசாமல் பேசுதே கண்கள் லேசா..
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா..

ஆ&பெ: என்னோடு வா தினமே..
என்னோடு வா தினமே..

ஆண்: என்னோடு வா தினமே..