HASILI FISILI

 ஹசிலி ஃபிசிலி




Movie: Aadhavan

Singers: Karthik,  Harini

Music director: Harris jayaraj 


ஆண்: அன்பே உன்னால் மனம் breezing..
அடடா காதல் என்றும் amazing..
Excuse me let me tell you something
நீ சிரித்தால் life phone ட்ரிங் ட்ரிங் 
நீ வீசும் அம்பு என்மேல் பாய..
காதல் வந்து ஆள..
வருவாயோ எனை காப்பாற்ற..
வந்தால் மடி சாய்வேன் வாழ..
 
ஹசிலி ஃபிசிலி என் ரசமளி..
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகளி..
என் இளமையும் இளமையும் பனித்துளி.. குதுகளி..
எனக்கும் உனக்குமா இடைவெளி..
நீ இரவிலும் இரவிலும் இமை வசி..
என் பகலிலும் பகலிலும் நடுநிசி.. புதுருசி..
அஞ்சனா அஞ்சனா..
கொஞ்சினால் தேன்தானா..
என் கனா ஓ என் கனா..
என்றுமே நீதானா நீதானா..

ஹசிலி ஃபிசிலி என் ரசமளி..
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகளி..
என் இளமையும் இளமையும் பனித்துளி.. குதுகளி..
எனக்கும் உனக்குமா இடைவெளி..
நீ இரவிலும் இரவிலும் இமை வசி..
என் பகலிலும் பகலிலும் நடுநிசி.. புதுருசி..

உரசாமல் அலசாமல் உயிரோடு ஊறுது ஆசை..
அதுங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஓய்ந்திடும் ஓசை..
இருவிழியே ஏவுகணை..
உனக்கெதுதான் ஈடு இணை..
உன் இடையோ ஊசி முனை..
உடைந்திடுமோ சேரு எனை..

பெண்: நீ என்னை தீண்டினாய் வெப்பமா..
நான் உனக்கு பூக்களின் உப்புமா..
விரலில் உள்ளதே நுட்பமா..
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சி கொன்றாய்..

ஆண்: ஹசிலி ஃபிசிலி என் ரசமளி..
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகளி..
என் இளமையும் இளமையும் பனித்துளி.. குதுகளி..
எனக்கும் உனக்குமா இடைவெளி..
நீ இரவிலும் இரவிலும் இமை வசி..
என் பகலிலும் பகலிலும் நடுநிசி.. புதுருசி..

அன்பே உன்னால் மனம் breezing..
அடடா காதல் என்றும் amazing..
Excuse me let me tell you something
நீ சிரித்தால் life phone ட்ரிங் ட்ரிங் 
நீ வீசும் அம்பு என்மேல் பாய..
காதல் வந்து ஆள..
வருவாயோ எனை காப்பாற்ற..
வந்தால் மடி சாய்வேன் வாழ..
நான் வாழ வாழ வாழ நான் வாழ வாழ come on..

பெண்: உயிரோடு உயிரோடு எனை கொல்ல நெருங்குகிறாயே..
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே..
யாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வேங்குழலோ..
உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ..

ஆண்: நீ ஆடை பாதியா பாதியா..
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா..
உன் அழகின் மீதிதான் பூமியா..
நீ முத்த பேயா வெக்கை தீயா..

ஹசிலி ஃபிசிலி என் ரசமளி..
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகளி..
என் இளமையும் இளமையும் பனித்துளி.. குதுகளி..
எனக்கும் உனக்குமா இடைவெளி..
நீ இரவிலும் இரவிலும் இமை வசி..
என் பகலிலும் பகலிலும் நடுநிசி.. புதுருசி..
அஞ்சனா அஞ்சனா..

பெண்: கொஞ்சினால் தேன்தானா..

ஆண்: என் கனா ஓ என் கனா..

பெண்: என்றுமே நீதானா ..






.........................





Songs lyrics from Aadhavan movie: