THOOLIYILE AADA VANDHA

 தூளியிலே ஆட வந்த



Movie: Chinna thambi 

Singers: Mano 

Music director: Ilayaraja 


தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே..
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே..
தொட்டில் மேலே முத்து மால..
வண்ண பூவா விளையாட..
சின்னத்தம்பி எச பாட..

தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே..
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே..

பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்..
பட்டமரம் பூ மலரும்..
பாறையிலும் நீர் சுரக்கும்..
பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்..
பட்டமரம் பூ மலரும்..
பாறையிலும் நீர் சுரக்கும்..
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்..
ஏழு கட்ட எட்டுக்கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்..
நான் படச்ச ஞானமெல்லாம் நான் கொடுத்தா சாமிதான்..
ஏடெடுத்து படிச்சதில்ல சாட்சியிந்த பூமிதான்..

தொட்டில் மேலே முத்து மால..
வண்ண பூவா விளையாட..
சின்னத்தம்பி எச பாட..

சோறு போட தாயிருக்கா பட்டினிய பார்த்ததில்ல..
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்கும் போனதில்ல..
சோறு போட தாயிருக்கா பட்டினிய பார்த்ததில்ல..
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்கும் போனதில்ல..
தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நான் அழுவேன்..
நான் அழுக தாங்கிடுமா உடனே தாய் அழுவா..
ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ளை தான்..
வாழுகிற வாழ்க்கையில தோல்விகளே இல்லைதான்..

தொட்டில் மேலே முத்து மால..
வண்ண பூவா விளையாட..
சின்னத்தம்பி எச பாட..

தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே..
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே..
தொட்டில் மேலே முத்து மால..
வண்ண பூவா விளையாட..சின்னத்தம்பி எச பாட..
வண்ண பூவா விளையாட..சின்னத்தம்பி எச பாட..