POVOMA OORKOLAM
போவோமா ஊர்கோலம்
Movie: Chinna thambi
Singers: S.P.Balasubramaniam, Swarnalatha
Music director: Ilayaraja
பெண்: போவோமா ஊர்கோலம்..
பூலோகம் எங்கெங்கும்..
ஓடும் பொன்னியாறும்..
பாடும் கானம் நூறும்..
காலம் யாவும் பேரின்பம்..
காணும் நேரம் ஆனந்தம்..
போவோமா ஊர்கோலம்..
பூலோகம் எங்கெங்கும்..
ஆண்: அரண்மன அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா.. அடுக்குமா..
பெண்: பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ள சுகம்
அரண்மன கொடுக்குமா..
ஆண்: குளுகுளு அறையில கொஞ்சி கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா..
பெண்: சிலுசிலு சிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா..கெடைக்குமா..
ஆண்: பளிங்கு போல உன் வீடு.. வழியில பள்ளம் மேடு..
பெண்: வரப்பு மேடு வயலோடும் பறந்து போவேன் பாரு..
ஆண்: அதிசயமான பெண்தானே..
பெண்: புது சுகம் தேடி வந்தேனே..
ஆண்: போவோமா ஊர்கோலம்..
பூலோகம் எங்கெங்கும்..
ஓடும் பொன்னியாறும்..
பாடும் கானம் நூறும்..
காலம் யாவும் பேரின்பம்..
காணும் நேரம் ஆனந்தம்..
போவோமா ஊர்கோலம்..
பூலோகம் எங்கெங்கும்..
பெண்: கொட்டுகிற அருவியும் மெட்டு கட்டும் குருவியும் அடடடா அதிசயம்..
ஆண்: கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது
இதிலென்ன ஒரு சுகம்..
பெண்: ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது
நடந்திடும் நதியிலே..
ஆண்: உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது
எனக்கொன்னும் புரியல..
பெண்: கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும்..
ஆண்: அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்..
பெண்: போதும் போதும் உன் பாட்டு..
ஆண்: புறப்பட போறேன் நிப்பாட்டு..
பெண்: போவோமா ஊர்கோலம்..
பூலோகம் எங்கெங்கும்..
ஆண்: ஓடும் பொன்னியாறும்..
பாடும் கானம் நூறும்..
பெண்: காலம் யாவும் பேரின்பம்..
காணும் நேரம் ஆனந்தம்..
ஆண்: போவோமா ஊர்கோலம்..
பெண்: பூலோகம் எங்கெங்கும்..
.......................
Songs lyrics from Chinna thambi movie: