KUYILA PUDICHU
குயில புடிச்சு
Movie: Chinna thambi
Singers: S.P.Balasubramaniam
Music director: Ilayaraja
குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவ சொல்லுகிற உலகம்..
மயில புடுச்சி கால ஒடச்சி ஆட சொல்லுகிற உலகம்..

அது எப்படி பாடுமய்யா..
அது எப்படி ஆடுமய்யா..ஓ.ஓஓஓ..ஓஓஓ..

ஆண்பிள்ள முடி போடும் பொன்தாலி கயிறு..
என்னான்னு தெரியாது எனக்கு..
ஆத்தாளை நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு..
ஆனாலும் பயனென்ன அதுக்கு..
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்..
யார் மேல எனக்கென்ன கோவம்..
ஓல குடிசையிலே இந்த ஏழ பொறந்ததுக்கு..
வந்தது தண்டனையா..
இது தெய்வத்தின் நிந்தனையா..
இதை யாரோடு சொல்ல..
குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவ சொல்லுகிற உலகம்..
மயில புடுச்சி கால ஒடச்சி ஆட சொல்லுகிற உலகம்..
அது எப்படி பாடுமய்யா..
அது எப்படி ஆடுமய்யா..ஓ.ஓஓஓ..ஓஓஓ..
குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவ சொல்லுகிற உலகம்..
மயில புடுச்சி கால ஒடச்சி ஆட சொல்லுகிற உலகம்..
எல்லார்க்கும் தலைமேல எழுத்தொன்னு உண்டு..
என்னான்னு யார் சொல்ல கூடும்.. கண்ணீர குடம் கொண்டு வடிச்சாலும் கூட..
எந்நாளும் அழியாமல் வாழும்..
யாரார்க்கு எதுவென்று விதி போடும் பாதை..
போனாலும் வந்தாலும் அதுதான்
ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி
கோழை என்றே இருந்தேன்
போனது கை நழுவி
இதை யாரோடு சொல்ல..
குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவ சொல்லுகிற உலகம்..
மயில புடுச்சி கால ஒடச்சி ஆட சொல்லுகிற உலகம்..
அது எப்படி பாடுமய்யா..
அது எப்படி ஆடுமய்யா..ஓ.ஓஓஓ..ஓஓஓ..
குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவ சொல்லுகிற உலகம்..
மயில புடுச்சி கால ஒடச்சி ஆட சொல்லுகிற உலகம்..
.......................
Songs lyrics from Chinna thambi movie: