ARACHA SANDHANAM
அரைச்ச சந்தனம்
Movie: Chinna thambi
Singers: S.P.Balasubramaniam
Music director: Ilayaraja
செம்பவள முத்துக்கள சேர்த்து வச்ச சித்திரமே
தங்க வளை வைர வளை போட்டிருக்கும் முத்தினமே..
வாய் தொறந்து நீ சிரிச்சா பாத்திருக்கும் அத்தனையும்
நீ வளர்ந்து பார்த்திருந்தா தோத்து விடும் இத்தனையும்..
அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே..
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே..
முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன..
ஒரு மந்திரம் செஞ்சது போல் பல மாயங்கள் தந்ததென்ன..
இது பூவோ பூந்தேனோ..

பூவடி அவ பொன்னடி அதை தேடி போகும் தேனீ..
தேனடி அந்த திருவடி அவ தேவலோக ராணி..
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ..
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ..
ரத்தினம் கட்டின பூந்தேரு உங்களை படைச்சதாரு..
என்னைக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு..
இது பூவோ பூந்தேனோ..
அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே..
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே..
முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன..
ஒரு மந்திரம் செஞ்சது போல் பல மாயங்கள் தந்ததென்ன..
இது பூவோ பூந்தேனோ..
அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே..
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே..
மான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்..
பூநிறம் அவ பொன்னிறம் அவ சிரிக்க நினைப்பு சிதறும்..
ஏலப்பூவு கோலம் போடும் நாசி தான்..
பல ஜாலத்தோடு ஆடப்போகும் ராசிதான்..
மொட்டுக்கள் இன்னைக்கு பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு..
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகள தட்டுங்க கேட்டு..
இது பூவோ பூந்தேனோ..
அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே..
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே..
முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன..
ஒரு மந்திரம் செஞ்சது போல் பல மாயங்கள் தந்ததென்ன..
இது பூவோ பூந்தேனோ..
அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே..
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே..
.......................
Songs lyrics from Chinna thambi movie: