NEE ENGE EN ANBE

 நீ எங்கே என் அன்பே

Movie: Chinna thambi 

Singers: Swarnalatha 

Music director: Ilayaraja

நீயெங்கே என் அன்பே..
மீண்டும் மீண்டும் மீண்டும் நீதான் இங்கு வேண்டும்..

நீயெங்கே என் அன்பே..
நீயின்றி நான் எங்கே..
மீண்டும் மீண்டும் மீண்டும் நீதான் இங்கு வேண்டும்..
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது..
நீயெங்கே என் அன்பே..
நீயின்றி நான் எங்கே..

விடிகிற வரையினில் கதைகளை படித்ததை நினைத்ததே நினைத்ததே..
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம் இது துடிக்குதே துடிக்குதே..
கதையிலே கனவிலே உறவுகள் உணர்வுகள் உருகுதே உருகுதே..
பிழையில்லை வழியில்லை அருவிகள் விழிகளில் பெருகுதே பெருகுதே..
வாழும்போது ஒன்றாக வாழ வேண்டும் வா வா..
விடியும்போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வா வா..
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது..

நீயெங்கே என் அன்பே.. 
நீயின்றி நான் எங்கே..
மீண்டும் மீண்டும் மீண்டும் நீதான் இங்கு வேண்டும்..
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது..
நீயெங்கே என் அன்பே..
நீயின்றி நான் எங்கே..

வீதியென்றும் வெட்டவெளி பொட்டல் என்றும் வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா..
வீடு என்றும் மொட்டை சுடுகாடு என்றும் தென்றல் இங்கு பார்க்குமா பார்க்குமா..
எத்தனென்றும் ஏழை பணக்காரன் என்றும் ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா..
பித்தன் என்றும் பிச்சை போடும் பக்தன் என்றும் உண்மை தெய்வம் பார்க்குமா பார்க்குமா..
காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு..
கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இன்று..