THEE ILLAI PUGAI ILLAI
தீயில்லை புகையில்லை
Movie: Engeyum kadhal
Singers: Naresh iyer, Mahathi
Music director: Harris jayaraj
ஆண்: தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே..
நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே..
பூ இல்லை மடல் இல்லை புது தேனை பெய்கிறாய் உயிரிலே..
என்னை உன்னிடம் இழக்கிறேன்..
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்..
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்..
ஓஓஓ..விலையாய் தந்தேனே என்னை..
ஓஓஓ..வாங்கி கொண்டேனே உன்னை..
ஓஓஓ...ஆடை கொண்டதோ தென்னை..
பெண்: வெகுநாளாய் கேட்டேன் விழி தூரல் போட்டாய்..
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே..
ஓ...விலகாத கையை தொட்டு..
விழியோர மையை தொட்டு..
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே..
இலக்கிய கனியை விழுங்கியது..
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது..
இது ஒரு சாட்சி போதாதா..
கண்கள் மோதாதா காதல் ஓதாதா..
ஆண்: தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே..
நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே..
பூ இல்லை மடல் இல்லை புது தேனை பெய்கிறாய் உயிரிலே..
என்னை உன்னிடம் இழக்கிறேன்..
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்..
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்..
ஆண்: புனல் மேலே வீற்று பனி வாடைக் காற்று..
புனைந்தது நமக்கொரு புதுப்பாட்டு..
பெண்: கடற்கரை நாரைக் கூட்டம் கரைந்திங்கு ஊரைக் கூட்டும்..
இருவரும் நகர்வலம் வர பார்த்து..
சிலுசிலுவென்று குளிர் அடிக்க..
தொடு தொடு என்று தளிர் துடிக்க..
எனக்கொரு பார்வை நீ தானே..
என்னை எடுப்பாயா உன்னுள் ஒளிப்பாயா..
ஆண்: தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே..
நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே..
பூ இல்லை மடல் இல்லை புது தேனை பெய்கிறாய் உயிரிலே..
என்னை உன்னிடம் இழக்கிறேன்..
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்..
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்..
ஓஓஓ..விலையாய் தந்தேனே என்னை..
ஓஓஓ..வாங்கி கொண்டேனே உன்னை..
ஓஓஓ...ஆடை கொண்டதோ தென்னை..
.........................
Songs lyrics from Engeyum kadhal movie: