LOLITAA
லோலிட்டா
Movie: Engeyum kadhal
Singers: Karthik, Prashanthini
Music director: Harris jayaraj
ஆண்: லோலிட்டா ஹலோலிட்டா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே..
பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்..
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்..
நீ வேகம் காட்டி போகும் போது நோகுதே..
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே..
லோலிட்டா ஹலோலிட்டா..
உன் கறை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே..
உண்மையை சொல்லட்டா..
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே..
பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்..
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்..
நீ வேகம் காட்டி போகும் போது நோகுதே..
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே..
லோலிட்டா ஹலோலிட்டா..
உன் கறை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே..
உண்மையை சொல்லட்டா..
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே..
பெண்: கொட்டும் போதே மழை..
கொட்டா விட்டால் பிழை..
வார்செய் வானம் மாற்றி பார்க்கிறாய்..
பெண்கள் எல்லாம் செடி..
பற்றி கொள்ளும் கொடி..
என்றே தப்பு தப்பாய் சொல்கிறாய்..
ஆண்: நான் நால்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா..
யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா..
நான் அலை நூறை அடை காக்கும் கடல் அல்லவா..
என் ஆகாயம் அதில் கூட பல வெண்ணிலா..
மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்..
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்..
நீ வேகம் காட்டி போகும் போது நோகுதே..
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே..
லோலிட்டா ஹலோலிட்டா..
உன் கறை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே..
உண்மையை நான் சொல்லட்டா..
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே..
ஆண்: தானாய் வந்தால் ருசி..
தள்ளி சென்றால் ரசி..
என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா..
முத்தம் என்றால் சிரி..
கட்டி கொண்டால் வெறி..
கண்ணை மூடி கொண்டு கிள்ளவா..
பெண்: நீ சொல்லும் பல நூறில் நானில்லையே..
உன் அழகான பல பூவில் தேன் இல்லையே..
உன் வெள்ளத்தில் நான் ஒன்றும் துரும்பில்லையே..
நீ ருசி பார்க்க தலை தாழ்த்தும் கரும்பில்லையே..
ஆண்: லோலிட்டா ஹலோலிட்டா..
உன் கறை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே..
உண்மையை நான் சொல்லட்டா..
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே..
.........................
Songs lyrics from Engeyum kadhal movie: