ENGEYUM KAADHAL

 எங்கேயும் காதல்




Movie: Engeyum kadhal 

Singers: Aalap raju, ranina reddy, devan ekambaram 

Music director: Harris jayaraj 


எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச..
வெண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத..
பொல்லாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட..
முதல் வரும் காதல் மண்ணில் முந்நூறு ஆண்டு வாழும்..
காதல் என்னும் தேனே..
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே..
வானே வண்ண மீனே..
மழை வெயில் என நான்கு காலம் நீயே..

கடற்கரையில் அதன் மணல் வெளியில் அக்காற்றோடு காற்றாக..
பல குரல்கள் பல பல விரல்கள் தமை பதிவு செய்திருக்கும்..
விடியலிலும் நடு இரவினிலும் இது ஓயாதே ஓயாதே..
சிரிப்பினிலும் பல சிணுங்கலிலும் மிக கலந்து காத்திருக்கும்..
ஓ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும் உள்ளம் தாங்காது தாங்காதே..
கண்கள் தான் பின்பு தூங்காதே..

எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச..
வெண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத..
பொல்லாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட..
முதல் வரும் காதல் மண்ணில் முந்நூறு ஆண்டு வாழும்..

அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும் யார் சொன்னாலும் கேட்காதே..
தர மறுக்கும் பின் தலை கொடுக்கும் இது புரண்டு தீர்த்திடுமே..
முகங்களையோ உடல் நிறங்களையோ இது பார்க்காதே பார்க்காதே..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க அது முயன்று பார்த்திடுமே..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தாட்டம் உண்டாகும்..
பூ செண்டாய் பூமி திண்டாடும்..

எங்கேயும் காதல்.. 
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச..
வெண்காலை சாரல்..
முகத்தினில் வந்து சட்டென்று மோத..
பொல்லாத பாடல்..
பரவசம் தந்து பாதத்தில் ஓட..
முதல் வரும் காதல் மண்ணில் முந்நூறு ஆண்டு வாழும்..
காதல் என்னும் தேனே..
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே..
வானே வண்ண மீனே..
மழை வெயில் என நான்கு காலம் நீயே..