SOLLITALEY AVA KAADHALA

 சொல்லிட்டாளே அவ காதல



Movie: Kumki

Singers: K.G.Ranjith, Shreya ghoshal 

Music director: D.Imman 


ஆண்: சொல்லிட்டாளே அவ காதல..
சொல்லும்போதே சுகம் தாளல..
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல..
இனி வேறொரு வார்த்தைய கேட்டிடவும் எண்ணி பாக்கல..
அவ சொன்ன சொல்லே போதும்..
அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்..

பெண்: சொல்லிட்டேனே இவ காதல..
சொல்லும்போதே சுகம் தாளல..
இதுபோல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல..
இனி வேறொரு வார்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல..
உனதன்பே ஒன்றே போதும்..
அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்..

ஆண்: அம்மையவள் சொன்ன சொல் கேக்கல..
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல..
உன்னுடைய சொல்ல கேட்டேன்..
ரெண்டு பேர ஒன்னா பாத்தேன்..

பெண்: மனசையும் தொறந்து சொன்னா 
எல்லாமே கெடைக்குது உலகத்துல..
வருவத எடுத்து சொன்னா சந்தோஷம் மொளைக்குது இதயத்துல..

ஆண்: அட சொன்ன சொல்லே போதும்..
அதுக்கு ஈடேற இல்ல ஏதும் ஏதும்..

பெண்: சொல்லிட்டேனே இவ காதல..

ஆண்: சொல்லிட்டாளே அவ காதல..

பெண்: ஓ..எத்தனையோ சொல்லு சொல்லாமலே உள்ளத்திலே உண்டு என்பார்களே..
சொல்லுறதில் பாதி இன்பம்..
சொன்ன பின்னே ஏது துன்பம்..

ஆண்: உதட்டுல இருந்து சொன்னா தன்னால மறந்திடும் நிமிஷத்துல..
இதயத்தில் இருந்து சொன்னா போகாம நிலைச்சிடும் உதிரத்துல..
அவ சொன்ன சொல்லே போதும்..
அதுக்கு ஈடேற இல்ல ஏதும் ஏதும்..

பெண்: சொல்லிட்டேனே இவ காதல..
சொல்லும்போதே சுகம் தாளல..
இதுபோல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல..
இனி வேறொரு வார்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல..
உனதன்பே ஒன்றே போதும்..
அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்..







...........................





Songs lyrics from Kumki movie: