ONNUM PURIYALA

 ஒன்னும் புரியல

Movie: Kumki

Singers: D.Imman 

Music director: D.Imman 

ஒன்னும் புரியல சொல்ல தெரியல கண்ணு முழியில கண்ட அழகுல ஆச கூடுதே..
உச்சந்தலையில உள்ள நரம்புல பத்து விரலுல தொட்ட நொடியில சூடு ஏறுதே..
நெத்தி பொட்டு தெறிக்குது..
விட்டு விட்டு ரெக்க மொளைக்குது..
நெஞ்சுக்குழி அடைக்குது மானே..
மனம் புத்தி தாவியே தறி கெட்டு ஓடுது..
உயிர் உன்ன சேரவே ஒரு திட்டம் போடுது..ஹேஹே..ஹேஹேஹே..

ஒன்னும் புரியல சொல்ல தெரியல கண்ணு முழியில கண்ட அழகுல ஆச கூடுதே..

அலையிற பேயா அவளது பார்வ என்ன தாக்குது வந்து என்ன தாக்குது..
பரவுற நோயா அவளது வாசம் என்ன வாட்டுது நின்னு என்ன வாட்டுது..
அவளது திருமேனி வெறி கூட்டுது..
அவளிடம் அடி வாங்க வழி காட்டுது..
அவ என்ன பேசுவா  அத எண்ண தோணுது..
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது..ஹேஹே..ஹேஹேஹே..

ஒன்னும் புரியல சொல்ல தெரியல கண்ணு முழியில கண்ட அழகுல ஆச கூடுதே..

கதிர் அருவாளா மனசையும் கீறி துண்டு போடுறா என்ன துண்டு போடுறா..
கலவர ஊரா அவ உருமாறி குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா..
விழியில பல நூறு படம் காட்டுறா..
அறுபது நெலவாக ஒளி கூட்டுறா..
அவ கிட்ட வந்ததும் தல சுத்தியாடுது..
அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது.. ஹேஹே..ஹேஹேஹே..

ஒன்னும் புரியல சொல்ல தெரியல கண்ணு முழியில கண்ட அழகுல ஆச கூடுதே..