SOI SOI

 சொய் சொய்



Movie: Kumki

Singers: magizhini manimaran

Music director: D.Imman 


சொய் சொய்..சொய் சொய்..

கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்..
அளவு ஏதும் இல்ல அதுதான் காதல் மச்சான்..
நாம ஜோரா மண்மேல சேரா விட்டாலும் நெனைப்பே போதும் மச்சான்..

சொய் சொய்..சொய் சொய்..

வானளவு விட்டத்துல வரப்பளவு தூரம் மச்சான்..
அளவு தேவையில்ல அதுதான் பாசம் மச்சான்..
நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்..

சொய் சொய்..சொய் சொய்..

ஏடளவு எண்ணத்துல எழுத்தளவு சிக்கல் மச்சான்..
அளவுகோலே இல்ல அது தான் ஊரு மச்சான்..
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான்..

நாடளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான்..
அளவு கோடே இல்ல அதுதான் நேசம் மச்சான்..
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான்..

சொய் சொய்..சொய் சொய்..

கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்..
அளவு ஏதும் இல்ல அதுதான் காதல் மச்சான்..
நாம காணும் எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான்..

சொய் சொய்..சொய் சொய்..
சொய் சொய்..சொய் சொய்..