ENNAMO YEDHO

 என்னமோ ஏதோ




Movie: Ko

Singers: Aalap raju, prashanthini, 

Music director: Harris jayaraj 


என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம்  பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்..
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபிழை..
ஓஓ உருவமில்லா உருவமில்லா நாளை..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபிழை..
ஓஓ அரைமனதாய் விடியிது என் காலை..

என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்..
அண்டி அகலுது வழியில்..
சிந்தி சிதறுது வெளியில்..
என்னமோ ஏதோ சிக்கி தவிக்குது மனதில்..
ரெக்கை விரிக்குது கனவில்..
விட்டு பறக்குது தொலைவில்..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபிழை..
ஓஓ உருவமில்லா உருவமில்லா நாளை..
ஏதோ..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபிழை..
ஓஓ அரைமனதாய் விடியிது நாளை..
நீயும் நானும் எந்திரமா..
யாரோ செய்யும் மந்திரமா பூவே..

முத்தமிட்ட மூச்சுக் காற்று பட்டு பட்டு கெட்டு போனேன்..
பக்கம் வந்து நிற்கும்போது திட்டமிட்டு எட்டிப் போனேன்..
நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்..
அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்..
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்..

 ஏதோ எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம்  பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்..
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்..
நீயும் நானும் எந்திரமா..
யாரோ செய்யும் மந்திரமா பூவே..

Let's go wow wow..
எங்களின் தமிழச்சி என்னமோ ஏதோ you are looking so fine
மறக்க முடியலயே என் மனம் அன்று
 உன் மனசோ lovely இப்படியே இப்ப உன் அருகில் நான் வந்து சேரவா என்று..
Lady looking like a cindrella cindrella
Naughty look-u விட்ட தென்றலா
Lady looking like a cindrella cindrella 
என்னை வட்டமிடும் வெண்ணிலா..
Lady looking like a cindrella cindrella
Naughty look-u விட்ட தென்றலா
Lady looking like a cindrella cindrella 
என்னை வட்டமிடும் வெண்ணிலா..

சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ..
சத்த சத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அறியும் அதிசயம் ஏனோ..
கனா காண தானே பெண்ணே கண்கொண்டு வந்தேனோ..
வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ..
நிழலை திருடும் மழலை நானோ..

ஏதோ எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம்  பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்..
ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபிழை..
ஓஓ உருவமில்லா உருவமில்லா நாளை..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபிழை..
ஓஓ அரைமனதாய் விடியிது என் காலை..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபிழை..
ஓஓ அரைமனதாய் விடியிது என் காலை..