AMALI THUMALI
அமளி துமளி
Movie: Ko
Singers: Hariharan, swetha mohan, Chinmayi
Music director: Harris jayaraj
ஆண்: அமளி துமளி நெளியும் வாலி என்னை கவ்வி கொண்டதே..
அழகு இடுப்பின் ஒரு பாதி என்னை அள்ளி சென்றதே..
கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத ஒரு தேசம் அழைக்குதே..
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே குளிர்காற்றும் வீசுதே..
பெண்: ரோஜா பூவும்..
ஆண்: அடி முள்ளில் பூக்கும் என அறிவேன்..
பெண்: பேனா முள்ளில்..
ஆண்: இந்த பூவும் பூப்பதொரு மாயம்..
பெண்: மாறி மாறி..
ஆண்: உன்னை பார்க்க சொல்லி விழி கெஞ்சும்..
எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு காதல் பொங்கி வருதே..
அமளி துமளி நெளியும் வாலி என்னை கவ்வி கொண்டதே..
அழகு இடுப்பின் ஒரு பாதி என்னை அள்ளி சென்றதே..
கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத ஒரு தேசம் அழைக்குதே..
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே குளிர்காற்றும் வீசுதே..
பெண்: வா என சொல்லவும் தயக்கம்..
மனம் போ என தள்ளவும் மறுக்கும்..
இங்கு காதலின் பாதையில் அனைத்தும்..
அட பெரும் குழப்பம்..
ஆண்: ஆறுகள் அருகினில் இருந்தும்..
அடைமழையது சோவென பொழிந்தும்..
அடி நீ மட்டும் தூரத்தில் இருந்தால்..
நா வறண்டுவிடும்..
ஏ..கூவா கூவா கூவா கூவா குயிலேது..
ஏ..தவ்வா தவ்வா தவ்வா தவ்வா மனமேது..
பெண்: ஓ முதல் மழை நனைத்ததை போலே..
முதல் புகழ் அடைந்ததை போலே..
குதிக்கிறேன் குதிக்கிறேன் மேலே ஆருயிரே..
ஆண்: ஓ எனக்குனை கொடுத்தது போதும்..
தரை தொட மறுக்குது பாதம்..
எனக்கினி உறக்கமும் தூரம் தேவதையே..
அமளி துமளி நெளியும் வாலி என்னை கவ்வி கொண்டதே..
அழகு இடுப்பின் ஒரு பாதி என்னை அள்ளி சென்றதே..
கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத ஒரு தேசம் அழைக்குதே..
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே குளிர்காற்றும் வீசுதே..
ஆண்: கால்களில் ஆடிடும் கொலுசு..
அதன் ஓசைகள் பூமிக்கு புதுசு..
அதை காதுகள் கேட்டிடும் பொழுது நான் கவியரசு..
பெண்: மேற்கிலும் சூரியன் உதிக்கும்..
நீர் மின்மினி சூட்டிலும் கொதிக்கும்..
அட அருகினில் நீ உள்ள வரைக்கும் மிக மணமணக்கும்..
ஆண்: ஹே பூவா பூவா பூவா பூவா சிரிப்பாலே..
ஹே அவா அவா அவா அவா தீர்த்தாயே..
ஏ சூடாமலே அணிகலன் இல்லை..
தொடாமலே உடல் பலன் இல்லை..
விடாமலே மனதினில் தொல்லை காதலியே..
பெண்: தொட தொட இனி தடை இல்லை..
இடைவெளி மிகப்பெரும் தொல்லை..
அடையலாம் மகிழ்ச்சியின் எல்லை ஊடலிலே..ஓ..
ஆண்: அமளி துமளி நெளியும் வாலி என்னை கவ்வி கொண்டதே..
அழகு இடுப்பின் ஒரு பாதி என்னை அள்ளி சென்றதே..
கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத ஒரு தேசம் அழைக்குதே..
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே குளிர்காற்றும் வீசுதே..
பெண்: ரோஜா பூவும்..
ஆண்: அடி முள்ளில் பூக்கும் என அறிவேன்..
பெண்: பேனா முள்ளில்..
ஆண்: இந்த பூவும் பூப்பதொரு மாயம்..
பெண்: மாறி மாறி..
ஆண்: உன்னை பார்க்க சொல்லி விழி கெஞ்சும்..
எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு காதல் பொங்கி வருதே..
..........................
Songs lyrics from Ko movie: