DEEWANA DEEWANA
தீவானா தீவானா
Movie: Gemini
Singers:sadhana sargham
Music director: Bharadwaj
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா..
தீவானா ஓ தீவானா நெஞ்சை பிழிந்தவன் நீதானா..
என் வீட்டு கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து
தன் காதல் சொல்லும் மாயக்கண்ணனா..
தீவானா ஓ தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா..
வெள்ளி கிழமையில் வீட்டு தோட்டத்தில்..
வால் முளைத்த சிட்டு ஒன்று வந்து விட்டதே..
கீச்சு கீச்சென்று கூச்சல் போடுதே..
நெஞ்சுக்கூட்டில் கூடு கட்ட மல்லு கட்டுதே..
சும்மா அது கத்தி செல்லுமோ..
இல்லை யம்மா நெஞ்சை கொத்தி செல்லுமோ..
அன்னை தந்தையை ஆசை தோழியை..
காணும்போது நாணம் வந்து கண்கள் கூசுதே..
தூக்கம் விற்று தான் காதல் வாங்கினாய்
என்று எந்தன் பெண்மை என்னை கேலி பேசுதே..
ஐயோ இன்னும் என்னவாகுமோ..
எந்தன் ஆடை நாளை கொள்ளை போகுமோ..
மிலே ஏக் அஜ்னப் கிசே கோயி ஆகேனா பிச்சே தும்ன ஹி க்யா பாத்து ஹே..
தீவானா ஓ தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா..
காதல் எண்ணமே ஐயோ அசிங்கமே
என்று கண்கள் காது மூக்கு பொத்தி கொண்டவள்..
காதல் காலடி ஓசை கேட்டதும் வீடு வாசல் கதவு ஜன்னல் திறந்து கொண்டன..
காதல் உள்ளே வந்து விட்டது..
எந்தன் நாணம் வெளியே சென்று விட்டது..
தோழி ஒருத்தியை நேரில் நிறுத்தி நான்
காதலுற்ற சேதி சொல்ல நெஞ்சம் முட்டுதே..
ஆனால் நாவிலே ஆனா ஆவனா
ரெண்டெழுத்தை தவிர வேறு வார்த்தை இல்லையே..
ஆசை வந்து தத்தளிக்கிறேன்..
என் பாஷை மாற்றி உச்சரிக்கிறேன்..
மிலே ஏக் அஜ்னப் கிசே கோயி ஆகேனா பிச்சே தும்ன ஹி க்யா பாத்து ஹே..
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா..
தீவானா ஓ தீவானா நெஞ்சை பிழிந்தவன் நீதானா..
என் வீட்டு கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து
தன் காதல் சொல்லும் மாயக்கண்ணனா..
தீவானா ஓ தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா..
.....................
Songs lyrics from Gemini Movie:
