ADI YAARADHU YAARADHU ANGE

 அடி யாரது யாரது அங்கே



Movie: Mettukudi

Singers: Mano,  K.S.Chithra 

Music director: Sirpi


ஆண்: அடி யாரது யாரது அங்கே..
என் காதல் தேவதையா..
பறிபோனது போனது நெஞ்சம்..
இது வாலிப சோதனையா..
அடி யாரது யாரது அங்கே..
என் காதல் தேவதையா..
பறிபோனது போனது நெஞ்சம்..
இது வாலிப சோதனையா..
பனி ரோஜா தோட்டம் தான்..
ஒரு சேலை கட்டியதா..

பெண்: அட உங்கள் கண் இன்று என் மேலே ஒட்டியதா..

ஆண்: நீ கனவா கற்பனையா..

பெண்: அட இன்னும் தெரியலையா..

ஆண்: அடி யாரது யாரது அங்கே..
என் காதல் தேவதையா..
பறிபோனது போனது நெஞ்சம்..
இது வாலிப சோதனையா..

பெண்: என் சேலை சோலைக்குள் முதல் பூவை பறித்தாயே..
என்னை மிச்சம் இல்லாமல் நீ அள்ளி குடித்தாயே..

ஆண்: முதல் பார்வையிலே என்னை நீ கொள்ளை அடித்தாயே..
என் உள்ளம் முழுவதிலும் புது வெள்ளை அடித்தாயே..
நீ மலரில் பிறந்தவளா..
இல்லை நிலவில் வளர்ந்தவளா..
அந்த காமன் வீட்டுக்கு ஒரு ஜன்னல் திறந்தவளா..

பெண்: அட இன்னும் தெரியலையா..
நான் உந்தன் துணையில்லையா..

ஆண்: அடி யாரது யாரது அங்கே..
என் காதல் தேவதையா..
பறிபோனது போனது நெஞ்சம்..
இது வாலிப சோதனையா..

ஆண்: ஒரு சிப்பியில் முத்தை போல் என்னை மூடி கொள்வாயா..
உன் அழகில் தொலைந்தவனை நீ தேடி தருவாயா..

பெண்: உன் கனவில் நனைகின்றேன் நீ குடைகள் தருவாயா..
நான் கொஞ்சம் தூங்குகிறேன் நீ தலையணை ஆவாயா..
நீ காதல் ஓவியனா..
ஒரு கவிதை நாயகனா..
நான் தேடும் மன்மதனா..
என் அழகின் காவலனா..

ஆண்: அட போதும் அம்மம்மா..
நாம் கைகள் இணைவோமா..

ஆண்: அடி யாரது யாரது அங்கே..
என் காதல் தேவதையா..
பறிபோனது போனது நெஞ்சம்..
இது வாலிப சோதனையா..

அடி யாரது யாரது அங்கே..
என் காதல் நாயகனா..
பறிபோனது போனது நெஞ்சம்..
இது வாலிப சோதனையா..

பனி ரோஜா தோட்டம் தான் ஒரு சேலை கட்டியதா..

பெண்: அட உங்கள் கண் இன்று என் மேலே ஒட்டியதா..

ஆண்: நீ கனவா கற்பனையா..

பெண்: அட இன்னும் தெரியலையா..

 





.....................





Songs lyrics from Mettukudi Movie: