SANDHIKKA THUDITHEN
சந்திக்க துடித்தேன்
Movie: Vedham pudhidhu
Singers: S.P.Balasubramaniam, S.Janaki
Music director: Devendhiran
ஆண்: சந்திக்க துடித்தேன் பொன்மானே..
சந்திக்க வருவாயா..
சந்திக்க துடித்தேன் பொன்மானே..
சந்திக்க வருவாயா..
பெண்: உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்..
ஆண்: கண்ணே மனம் இல்லையா..
காவல் விடவில்லையா..
சந்திக்க துடித்தேன் பொன்மானே..
சந்திக்க வருவாயா..
பெண்: முன் வைத்த காலை பின் வைப்பதென்ன
நடுக்கம் பிறக்கின்றதா..
ஆண்: இலைகள் அசையும் ஒலியில் கூட
இதயம் துடிக்கின்றதா..
பெண்: அச்சத்தில் பாதி ஆசையில் பாதி
அச்சத்தில் பாதி ஆசையில் பாதி
பெண்மை நடக்கின்றதா..
ஆண்: உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும்
மௌனம் கூட சத்தம் போடும்..
பெண்: ஜீவன் தவிக்கின்றதா..
தேகம் கொதிக்கின்றதா..
ஆண்: சந்திக்க துடித்தேன் பொன்மானே..
சந்திக்க வருவாயா..
ஆண்: கங்கையை தேடி காவிரி நடந்து கலக்க வருகின்றதோ..
பெண்: காதலின் நதிகள் கலக்க துடித்தால் மேடு தடுக்கின்றதோ..
ஆண்: நதிகள் இரண்டும் தாகம் எடுத்து
நதிகள் இரண்டும் தாகம் எடுத்து
குடிக்க துடிக்கின்றதோ..
பெண்: காதல் இன்றி வாழ்வே இல்லை..
காதல் கொண்டால் சாவே இல்லை..
ஆண்: பெண்மை சிலிர்க்கின்றதோ..
பேச தவிக்கின்றதோ..
ஆண்: சந்திக்க துடித்தேன் பொன்மானே..
சந்திக்க வருவாயா..
பெண்: உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்..
ஆண்: கண்ணே மனம் இல்லையா..
காவல் விடவில்லையா..
சந்திக்க துடித்தேன் பொன்மானே..
........................
Songs lyrics from vedham pudhidhu movie:
