PUTHAM PUDHU OLAI VARUM
புத்தம் புது ஓலை வரும்
Movie: Vedham pudhidhu
Singers: K.S.Chithra
Music director: Devendhiran
புத்தம் புது ஓலை வரும்..
இந்த பூவுக்கொரு மாலை வரும்..
புத்தம் புது ஓலை வரும்..
இந்த பூவுக்கொரு மாலை வரும்..
நந்தவனங்கள் பூமாலை கட்டும்..
நாதஸ்வரங்கள் பொன்மேளங்கொட்டும்..
நட்சத்திரம் அட்சதைகள் போடும்.. பண்பாடும்
என் நேரம் கூடும்..
புத்தம் புது ஓலை வரும்..
இந்த பூவுக்கொரு மாலை வரும்..
என்னென்ன தடை வந்தபோதும்..
காதல் இறப்பதில்லை..
மேகங்கள் பொழிகின்ற வெள்ளம்..
வானத்தை நனைப்பதில்லை..
காலம் இன்னும் கூடவில்லை..
மாலை இன்னும் வாடவில்லை..
நம்பிக்கை இழக்கவில்லை இப்போது..
புத்தம் புது ஓலை வரும்..
இந்த பூவுக்கொரு மாலை வரும்..
கண்ணுக்குள் ஜீவனை தேக்கி..
காலம் கழித்திருப்பேன்..
உலகம் அழிகின்ற போதும்..
உன்னை நினைத்திருப்பேன்..
தேவனே காத்திருப்பேன்..
தீயிலே பூத்திருப்பேன்..
ஜென்மங்கள் தொடர்ந்திருப்பேன் இப்போது..
புத்தம் புது ஓலை வரும்..
இந்த பூவுக்கொரு மாலை வரும்..
புத்தம் புது ஓலை வரும்..
இந்த பூவுக்கொரு மாலை வரும்..
நந்தவனங்கள் பூமாலை கட்டும்..
நாதஸ்வரங்கள் பொன்மேளங்கொட்டும்..
நட்சத்திரம் அட்சதைகள் போடும் பண்பாடும்..
என் நேரம் கூடும்..
புத்தம் புது ஓலை வரும்..
இந்த பூவுக்கொரு மாலை வரும்..
புத்தம் புது ஓலை வரும்..
இந்த பூவுக்கொரு மாலை வரும்..
.......................
Songs lyrics from vedham pudhidhu movie:
