MANDHIRAM SONNEN

 மந்திரம் சொன்னேன்



Movie: Vedham pudhidhu

Singers: Mano,  S.Janaki 

Music director: Devendhiran


ஆண்: மந்திரம் சொன்னேன் வந்துவிடு..
சம்மதம் எங்கே தந்துவிடு..
புதிய பாடம் சொல்வேனே..
அதன் பொருளை சொல்வாய் செந்தேனே..
புதிய பாடம் சொல்வேனே..
அதன் பொருளை சொல்வாய் செந்தேனே..
பாதம் பார்த்து வேதம் சொல்ல ஆற்றங்கரைக்கு வந்தேனே..

மந்திரம் சொன்னேன் வந்துவிடு..
சம்மதம் எங்கே தந்துவிடு..

ஆண்: கண்மணி உனக்கு ஒன்னு தெரியுமா..
அந்த இடுப்பில் இருக்குது என் மனசு..

பெண்: என் மனம் உனக்கென்ன புரியுமா..
தண்ணீர் குடத்தில் துடிக்குது என் உயிரு..

ஆண்: நீ குளித்தால் நதியில் மணம் இருக்கும்..

பெண்: நீ ரசித்தால் கவியின் குணம் இருக்கும்..

ஆண்: வந்துவிட்டேன் மெல்ல மெல்ல..

பெண்: தந்துவிட்டேன் என்ன சொல்ல..

ஆண்: பாவம் அல்ல..
வேதங்கள் தடை அல்ல..

மந்திரம் சொன்னேன் வந்துவிடு..
சம்மதம் எங்கே தந்துவிடு..

ஆண்: பொருத்தம் நமக்குள் இல்லை என்று..
நீ நினைத்ததுண்டோ நெஞ்சுக்குள்ள..

பெண்: தாமிரபரணி ஆற்றுத் தண்ணீ..
அது ஜாதி பேதம் பார்ப்பதில்லை..

ஆண்: நீ நினைத்தால் திருநீர் அணிந்திருப்பேன்..

பெண்: நீ தடுத்தால் கோயில் மறந்திருப்பேன்..

ஆண்: தொட்டதெல்லாம் வெற்றியடி..

பெண்: வெற்றி கண்டால் அல்லிக்கொடி..

ஆண்: கட்டிபிடி..

பெண்: காதல் வேதம் கற்பிக்க வா..
காதில் வந்து ஒப்பிக்கவா..
காதல் என்னை அழைக்குது..
எங்கள் வேதங்கள் என்னை தடுக்குது..
காதல் பெரிதா வேதம் பெரிதா..

ஆ&பெ: காதல்தானே ஜெயிக்குது

ஆண்: மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்..
சம்மதம் எல்லாம் தந்து விட்டாள்..
காலம் நேரம் பாராமல்..
பிறர் கண்கள் ஏதும் காணாமல்..
காலம் நேரம் பாராமல்..
பிறர் கண்கள் ஏதும் காணாமல்..

ஆ&பெ: ஆற்று மணலில் பேர்கள் எழுதி
அழகு பார்ப்போம் அன்பே வா..
அழகு பார்ப்போம் அன்பே வா..
அழகு பார்ப்போம் அன்பே வா..





.......................




Songs lyrics from vedham pudhidhu movie: