KANNUKUL NOORU NILAVA

 கண்ணுக்குள் நூறு நிலவா




Movie: Vedham pudhidhu

Singers: S.P.Balasubramaniam,  K.S.Chithra 

Music director: Devendhiran


ஆண்: கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா..
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா..
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா..
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா..
நாணம் விடவில்லை தொடவில்லை..
ஏனோ விடை இன்னும் வரவில்லை..
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா..
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா..

பெண்: கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா..
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா..

ஆண்: தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்..
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா..

பெண்: கொல்லை துளசி எல்லை கடந்தால்..
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா..

ஆண்: வானுக்கு எல்லை யார் போட்டது..
வாழ்க்கைக்கு எல்லை நாம் போட்டது..

பெண்: சாஸ்த்திரம் தாண்டி தப்பி செல்வதேது..

ஆண்: கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா..
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா..

பூவே பெண் பூவே..
இதில் என்ன அதிசயம்
இளமையின் அவசியம்
இது என்ன ரகசியம்
இவன் மனம் புரியலையா

பெண்: ஆணின் தவிப்பு அடங்கிவிடும்..
பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்..

ஆண்: உள்ளம் என்பது உள்ளவரைக்கும்..
இன்பம் துன்பம் எல்லாமே இருவருக்கும்..

பெண்: என்னுள்ளே ஏதோ உண்டானது..
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது..

ஆண்: ரெண்டா ஏது.. ஒன்று பட்ட போது..

பெண்: கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா..
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா..
நாணம் விடவில்லை தொடவில்லை..
ஏனோ விடை இன்னும் வரவில்லை..

ஆண்: ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா..
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா..

பெண்: கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா..

ஆண்: கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா..





........................





Songs lyrics from vedham pudhidhu movie: