MAATU VANDI SAALAIYILE
மாட்டு வண்டி சாலையிலே
Movie: Vedham pudhidhu
Singers: Malaysia vasudevan
Music director: Devendhiran
மாட்டு வண்டி சாலையிலே..
பூட்டு வண்டி போகுதம்மா..
பூட்டு வண்டி உள்ளுக்குள்ளே..
கூண்டுக்கிளி வாடுதம்மா..
கூறப்பட்ட இடம் வேறு..
இவள் போகும் இடம் வேறு..
காதலுக்கு வரலாறு..
கண்ணீரு தகராறு..
மாட்டு வண்டி சாலையிலே..
பூட்டு வண்டி போகுதம்மா..
ஓடிப்போய் சொல்லிவிட..
உயிர் கிடந்து துடிக்கிறது..
ஊமை கண்ட கனவு இது..
உள்ளுக்குள் வலிக்கிறது..
எண்ணத்தை சொல்லாமல் ..
ரெண்டு மனம் தவிக்குது..
கன்னத்தில் சிந்தாமல்..
கண்ணீரும் உறைந்தது..
காட்டு மரங்கள் எல்லாம் கைநீட்டி அழைக்குது..
மாட்டு சலங்கை எல்லாம் மகளோடு அழுகுது..
மாட்டு வண்டி சாலையிலே..
பூட்டு வண்டி போகுதம்மா..
ஆற்று மணல் மேடுகளே..
அதனருகே ஆலயமே..
தென்னம் இளம் தோப்புகளே..
தேன் கொடுத்த சோலைகளே..
நதி வழி போன மகள்..
விதி வழி போகின்றாள்..
இதயத்தில் துடிப்பில்லை..
இருந்தாலும் வாழுகின்றாள்..
சின்ன கிளி இரண்டும் செய்து விட்ட பாவம் என்ன..
அன்பை கொன்று விட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன..
மாட்டு வண்டி சாலையிலே..
பூட்டு வண்டி போகுதம்மா..
பூட்டு வண்டி உள்ளுக்குள்ளே..
கூண்டுக்கிளி வாடுதம்மா..
கூறப்பட்ட இடம் வேறு..
இவள் போகும் இடம் வேறு..
காதலுக்கு வரலாறு..
கண்ணீரு தகராறு..
மாட்டு வண்டி சாலையிலே..
பூட்டு வண்டி போகுதம்மா..
பூட்டு வண்டி போகுதம்மா..
.........................
Songs lyrics from vedham pudhidhu movie:
