VAAREN VAAREN SEEMARAJA

 வாரேன் வாரேன் சீமராஜா



Movie: Seemaraja

Singers: Diwakar, Kavitha gopi

Music director: D.Imman 


பெண்: நெருப்பான நெல்லையிலே பொறுப்பான மன்னனடா..
ஊரை சிறப்பாக வைத்திடவே செயலாற்றும் மன்னனடா..
தப்பில்லாத மனசு கொண்ட தமிழ்நாட்டு சிங்கமடா..
அவன் அப்பன் காச அள்ளி எறைக்க அவதரிச்ச தங்கமடா..

ஆண்: வாரேன் வாரேன் சீமராஜா வழிய விடுங்கடா..
நான் வேஷம் இல்லா பாசக்காரன்  நெசம் தான் நம்புங்கடா..ஏ..

வாரேன் வாரேன் சீமராஜா வழிய விடுங்கடா..
நான் வேஷம் இல்லா பாசக்காரன்  நெசம் தான் நம்புங்கடா..
சுயநலமே பொதுநலமா ஏத்துவனே கொடிய..
என் பொதுநலமும் சுயநலந்தான் பாத்துக்கோ என் படைய..
என் பேர கேக்க கூடும் பாரு அரங்கு அரங்கு..
நான் ஏழைக்கேத்த ஏரோபிளேனு ஒதுங்கு ஒதுங்கு..
என் பேர கேக்க கூடும் பாரு அரங்கு அரங்கு..
நான் ஏழைக்கேத்த ஏரோபிளேனு ஒதுங்கு ஒதுங்கு..

வாரேன் வாரேன் சீமராஜா வழிய விடுங்கடா..
நான் வேஷம் இல்லா பாசக்காரன்  நெசம் தான் நம்புங்கடா..ஏ..

போட்டி போட்டு அன்பு செஞ்சி லைக்ஸ் அள்ளும் என் சேட்டை..
நோக்கம் போல கருத்தும் சொல்லி வாங்கி போவன் பாரட்ட..
விவசாயி இல்லையினா அடுப்புல சோறும் பொங்காதுடா..
பெரியோர்கள் சொன்னாலுமே அதையே நானும் சொல்வேனடா..
ஏ ஊரெல்லாம் என் படத்த போட்டா ஆகும் ட்ரெண்டு..
நான் வாலில்லா பட்டாம்பூச்சி எல்லாருக்கும் ஃப்ரெண்டு
எதிரியாவே இருந்தாலும் அவன மதிக்க பழகணும்டா..
வலது கை கொடுக்கறது இடது கைக்கும் தெரியணும்டா..

வாரேன் வாரேன் சீமராஜா வழிய விடுங்கடா..
நான் வேஷம் இல்லா பாசக்காரன்  நெசம் தான் நம்புங்கடா..

கால வார நூறு பேரு..
சேஃபா நீயும் கேம் ஆடு..
தூக்கி விடத்தான் கோடி பேரு..
துணிஞ்சி போயி போராடு..
பணம் காச சேத்து வெச்சா ஷுகரு பீபி ஏறுமடா..
ஒன் பை டூ டீ குடிச்சா அதுதான் டேஸ்ட்டு கேளுங்கடா..
நான் வீராப்ப காட்டிபுட்டு தந்ததில்ல டிமிக்கி..
நான் ஜால்ராவ தட்டையிலும் வாசிப்பனே அமுக்கி
டிகிரி வாங்கி குவிச்சாலும் தமிழு நமது தனி பெரும..
அரச்ச மாவ அரச்சாலும் அதுக்கும் வேணும் ஒரு தெறம..

வாரேன் வாரேன் சீமராஜா.(ராஜா )வழிய விடுங்கடா..(ராஜா).
நான் வேஷம் இல்லா பாசக்காரன்  நெசம் தான் நம்புங்கடா..




....................




Songs lyrics from Seemaraja movie: