RAGASIYA KANAVUGAL

 ரகசிய கனவுகள் 



Movie: Bheema

Singers: Hariharan,  Madhusree

Music director: Harris jayaraj 


பெண்: ரகசிய கனவுகள் ஜல் ஜல்..
என் இமைகளை கழுவுது சொல் சொல்..
இளமையில் இளமையில் ஜில் ஜில்..
என் இருதயம் நழுவுது செல் செல்..

ஆண்: முதல் பிழை போல் மனதினிலே விழுந்தது உனதுருவம்..
ஓ உதடுகளால் உனை படிப்பேன்..
இருந்திடு அரை நிமிடம்..
தொலைவது போல் தொலைவது தான் 
உலகில் உலகில் புனிதம்..

குழு: இறகே இறகே மயிலிறகே..
வண்ண மயிலிறகே..
வந்து தொடு அழகே..
தொட தொட பொழிகிற சுகம் சுகமே..
கண் பட பட புதிர்களும் அவிழ்ந்திடுமே..
இறகே இறகே மயிலிறகே..
வண்ண மயிலிறகே..
வந்து தொடு அழகே..
தொட தொட பொழிகிற சுகம் சுகமே..
கண் பட பட புதிர்களும் அவிழ்ந்திடுமே..

பெண்: மறுபடி ஒருமுறை பிறந்தேனே..
விரல் தொட புருவமும் சிவந்தேனே..
ஓ இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ..
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ..

ஆண்: சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல எனை சூட 
நரம்புகளோடு குறும்புகள் நாளும் எழுதிய கணக்கு
எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு..

பெண்: ரகசிய கனவுகள் ஜல் ஜல்..
என் இமைகளை கழுவுது சொல் சொல்..
இளமையில் இளமையில் ஜில் ஜில்..
என் இருதயம் நழுவுது செல் செல்..

ஆண்: உயிரணு முழுவதும் உனை பேச.. உனை பேச..
இமை தொடும் நினைவுகள் அனல் வீச..
அனல் வீச..
ஓ நினைச்சாலே சிவப்பாகும் மருதாணி தோட்டம் நீ..
தலை வைத்து நான் தூங்கும் தலைகாணி கூச்சம் நீ ...

பெண்: எனதிரவினில் கசிகிற நிலவொளி நீயே..படர்வாயே..
நெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்..
தவறுகளாலே தொடுகிற நீ ஓர் அழகிய மிருகம்..

ஆண்: ரகசிய கனவுகள் ஜல் ஜல்..
உன் இமைகளை கழுவுது சொல் சொல்..
இளமையில் இளமையில் ஜில் ஜில்..
என் இருதயம் நழுவுது செல் செல்..

பெண்: குயிலினமே குயிலினமே..
எனக்கோரு சிறகு கொடு..
முகிலினமே முகிலினமே முகவரி எழுதி கொடு..
அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு..

குழு: இறகே இறகே மயிலிறகே..
வண்ண மயிலிறகே..
வந்து தொடு அழகே..
தொட தொட பொழிகிற சுகம் சுகமே..
கண் பட பட புதிர்களும் அவிழ்ந்திடுமே..
இறகே இறகே மயிலிறகே..
வண்ண மயிலிறகே..
வந்து தொடு அழகே..
தொட தொட பொழிகிற சுகம் சுகமே..
கண் பட பட புதிர்களும் அவிழ்ந்திடுமே..
இறகே இறகே மயிலிறகே..
வண்ண மயிலிறகே..
வந்து தொடு அழகே..
தொட தொட பொழிகிற சுகம் சுகமே..
கண் பட பட புதிர்களும் அவிழ்ந்திடுமே..
இறகே இறகே மயிலிறகே..
வண்ண மயிலிறகே..
வந்து தொடு அழகே..
தொட தொட பொழிகிற சுகம் சுகமே..
கண் பட பட புதிர்களும் அவிழ்ந்திடுமே..




................




Songs lyrics from bheema movie:-