ENADHUYIRE
எனதுயிரே
Movie: Bheema
Singers: Sadhana sargham, chinmayi, vikram
Music director:Harris jayaraj
பெண்: எனதுயிரே...எனதுயிரே...
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே..எனதுறவே..
கடவுளை போல் நீ முளைத்தாய்..
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்..
சேர்கிறேன் வாழும் காலமே..
வரும் நாட்களே.. தரும் பூக்களே..
நீளுமே காதல்..காதல்..வாசமே...
எனதுயிரே...எனதுயிரே...
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே..எனதுறவே..
கடவுளை போல் நீ முளைத்தாய்..
ஆண்: இனி இரவே இல்லை..
கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை..
இனி பிரிவே இல்லை..
அன்பே உன் உளறலும் எனக்கு இசை..
பெண்: உன்னை காணும் வரையில்..
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்...
கண்ணால் அதிலே எழுதி போனாய் நல்ல ஓவியம்..
சிறு பார்வையில்..
ஒரு வார்த்தையில்..
தோன்றுதே நூறு கோடி வானவில்..
ஆண்: எனதுயிரே...எனதுயிரே...
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே..எனதுறவே..
கடவுளை போல் நீ முளைத்தாய்..
பெண்: மரமிருந்தால்..
அங்கே எனை நான் நிழலென நிறுத்திடுவேன்..
இலை விழுந்தால்..
ஐயோ என்றே நான் இருதயம் துடித்திடுவேன்..
ஆண்: இனிமேல் நமது இதழ்கள்
இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே..
நெடுநாள் நிலவும் நிலவின் களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே..
உருவாக்கினாய்..அதிகாலையே..
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே..
பெண்: எனதுயிரே...எனதுயிரே...
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே..எனதுறவே..
கடவுளை போல் நீ முளைத்தாய்..
ஆண்: நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்..
சேர்கிறேன் வாழும் காலமே..
வரும் நாட்களே.. தரும் பூக்களே..
நீளுமே காதல்..காதல்..வாசமே...
...................
Songs lyrics from bheema movie:-
