ORU MUGAMO
ஒரு முகமோ
Movie: Bheema
Singer: Krish, Naresh iyer
Music director: Harris jayaraj
ஒரு முகமோ..இரு முகமோ..
முழு முகமும் கலவரமோ..
பயம் அறியாது இவன் தேசமோ..
இவன் விழிகள் குறிதானோ..
கண் அசைவில் கவர்வானோ..
வலி அறியாது இவன் தேகமோ..
ஒரு முகமோ..இரு முகமோ..
முழு முகமும் கலவரமோ..
பயம் அறியாது இவன் தேசமோ..
இவன் விழிகள் குறிதானோ..
கண் அசைவில் கவர்வானோ..
வலி அறியாது இவன் தேகமோ..
நொடியில் நொடியில் முடிவெடுப்பான்..
இடியின் மடியில் தினம் படுப்பான்..
அடியில் வெடியில் உயிரெடுப்பான்..
நிழல் போல் இருப்பான்..
எதிரும் புதிரும் போல் இருப்பான்..
அதிரும் செயலில் பூப்பறிப்பான்..
உதிரும் உயிரில் கணக்கெடுப்பான்..
நெருப்பாய் நடப்பான்..
உலகம் அதிகாலை சோம்பல் முறிக்கும்..
ஆனால் இவன் கையில் தோட்டா தெறிக்கும்..
ஒரு சமயம் இவன் செயல் நியாயம்..
மறு சமயம் இவன் செயல் மாயம்..
ஜக ஜகஜோம் ஜஜோம்ச்ச
ஜகஜோம் ஜகோம்ச்ச
ஜகிட ஜகிட ஜகிட ஜக ஜக..
ஒரு முகமோ..இரு முகமோ..
முழு முகமும் கலவரமோ..
பயம் அறியாது இவன் தேசமோ..
இவன் விழிகள் குறிதானோ..
கண் அசைவில் கவர்வானோ..
வலி அறியாது இவன் தேகமோ..
தெறிக்கும் தெறிக்கும் இசை பிடிக்கும்..
சிரிக்கும் சிரிக்கும் மனம் பிடிக்கும்..
வெடிக்கும் வெடிக்கும் ஒலி பிடிக்கும்..
இரவின் தலைவன்..
எதையும் செய்வான் உடனுக்குடன்..
தேநீர் விருந்து ஆபத்துடன்..
செல்வான் வெல்வான் வேகத்துடன்..
இயங்கும் இளைஞன்..
ரோஜாக்கள் தோற்கும் இவனின் முகமே..
உள் சென்று பார்த்தால் உறுமும் குணமே..
அட போனால் போகட்டும் என்பான்..
தினம் பகையை உணவென உண்பான்..
ஜக ஜகஜோம் ஜஜோம்ச்ச
ஜகஜோம் ஜகோம்ச்ச
ஜகிட ஜகிட ஜகிட ஜக ஜக..
ஒரு முகமோ..இரு முகமோ..
முழு முகமும் கலவரமோ..
பயம் அறியாது இவன் தேசமோ..
இவன் விழிகள் குறிதானோ..
கண் அசைவில் கவர்வானோ..
வலி அறியாது இவன் தேகமோ..
.................
Songs lyrics from bheema movie:-
