MUDHAL MAZHAI

முதல் மழை என்னை



Movie: Bheema

Singers: Hariharan,  Mahathi, R.Prasanna

Music director: Harris jayaraj 


ஆண்: முதல் மழை எனை நனைத்ததே..
முதல் முறை ஜன்னல் திறந்ததே..
பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே..
இதயமும் ஓ இதமாய் மிதந்ததே..

பெண்: முதல் மழை நம்மை நனைத்ததே..
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே..
பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே..
இதயமும் இதமாய் மிதந்ததே..

ஆண்: கனவோடு தான் அடி நீ தோன்றினாய்..
கண்களால் உன்னை படம் எடுத்தேன்..
என் வாசலில் நேற்று உன் வாசனை..
நீ நின்ற இடம் என்று உணர்ந்தேன்..

பெண்: எதுவும் புரியா புது கவிதை..
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்..
கையை மீறும் ஒரு குடையாய்..
காற்றோடு தான் நானும் பறந்தேன்..
மழை காற்றோடு தான் நானும் பறந்தேன்..

ஆண்: முதல் மழை எனை நனைத்ததே..
முதல் முறை ஜன்னல் திறந்ததே..
பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே..
இதயமும் ஓ இதமாய் மிதந்ததே..

பெண்: ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால்..
என் வாழ்வில் அந்த நாளே இல்லை..ஓ..
ஓர் நாள் உனை நானும் பார்த்தே விட்டால் 
அந்நாளின் நீளம் போதவில்லை..

ஆண்: இரவும் பகலும் ஒரு மயக்கம்..
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்..
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்..
இறந்தாலுமே என்றும் இருக்கும்..
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்..

பெண்: ஊ..ஊ..ஊ..ஊ..

ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே..

பெண்: ஊ..ஊ...

ஆண்: இதயமும் ஓ இதமாய் மிதந்ததே..




.................




Songs lyrics from bheema movie:-