PACHAI KAATRE
பச்சை காற்றே
Movie: Abiyum naanum
Singers: Sadhana sargham
Music director: Vidyasagar
பெண்: பச்சை காற்றே வீசு..
பன்னீர் வார்த்தை பேசு..
காலை பூவே மாலை போடு..
தேவை கண்டு தேன் கொடு..
துள்ளும் மேகம் தூரல் போடு..
சொல்லும் போது போய்விடு..
ஆண்: துலிசோ லீபத்து ஆ சகி ஹே
பலி அஜு நோபஞ்சா பத்தி ஹே
ஓ பலே பலே பக்குடங்கு பாவலங்கு சப்பு லங்கு தவ ஷாவா
சாட்டுக்கர தீ மகராணி ஹே
புலி ஹே படியசு ராணி ஹே
சதிகிட்டவா மாரி மாரி ஜாவாஆஜூ குஷியவா நோமராவா ஹா..
பெண்: பச்சை காற்றே வீசு..
பன்னீர் வார்த்தை பேசு..
பெண்: ஊர்களை மாற்றி பிறந்திருந்தாலும்
உடல்களுக்குள்ளே மதம் இல்லை..
பேர்களை மாற்றி நீ அழைத்தாலும்
கடல்களுக்குள்ளே சுவர் இல்லை..
காற்றின் ஓடை எந்த நதியிலும் சேர்ந்துவிடும்..
காதல் பாடல் எந்த சுதியிலும் சேர்ந்து விடும்..
இதில் சரியென்றும் தவறென்றும் யார் சொல்வது..
ஆண்: துலிசோ லீபத்து ஆ சகி ஹே
பலி அஜு நோபஞ்சா பத்தி ஹே
ஓ பலே பலே பக்குடங்கு பாவலங்கு சப்பு லங்கு தவ ஷாவா..
பெண்: பச்சை காற்றே வீசு..
பன்னீர் வார்த்தை பேசு..
பெண்: நேர்கொண்ட நதியில் அழகொன்றும் இல்லை..
வளைகின்ற நதியில் அழகதிகம்..ஓய்..
வாழ்க்கையும் கூட வளைகின்ற நதி தான்..
திருப்பத்தில் தானே ருசி அதிகம்..
மனிதன் பின்னால் எந்தன் வாழ்க்கையும் வருவதில்லை..
வாழ்வின் பின்னால் நீ செல்வதில் தொல்லை இல்லை..
எந்தன் வாழ்வோடு நான் செல்ல வாதம் இல்லை..
ஆண்: துலிசோ லீபத்து ஆ சகி ஹே
பலி அஜு நோபஞ்சா பத்தி ஹே
ஓ பலே பலே பக்குடங்கு பாவலங்கு சப்பு லங்கு தவ ஷாவா
சாட்டுக்கர தீ மகராணி ஹே
புலி ஹே படியசு ராணி ஹே
சதிகட்டவா மாரி மாரி ஜாவாஆஜூ குஷியவா நோமராவா ஹா..
......................
songs lyrics from abiyum naanum movie:-
