OREY ORU OORILE

 ஒரே ஒரு ஊரிலே



Movie: Abiyum naanum

Singers: Kailash kher

Music director: Vidyasagar 


ஒரே ஒரு ஊரிலே..ஒரே ஒரு ஐயா..
ஒரே ஒரு ஐயாவுக்கு..ஒரே ஒரு அம்மா..
ஒரே ஒரு அம்மா பெத்தா ஒரே ஒரு பொண்ணு..
அவ பொண்ணு இல்ல பொண்ணு இல்ல கடவுளோட கண்ணு..

ஐயா இருக்காரே ஐயா..
பாசம் இல்லாம பலரு பைத்தியமா ஆனதுண்டு..
பாசத்தினாலே இவரு பைத்தியமா ஆவதுண்டு..
காத்தடிச்சா மகளுக்கு காவலுக்கு நிப்பாரு..
காச்சடிச்சா சூரியன கைது செய்ய பாப்பாரு..
மக மட்டும் மக மட்டும் உசிரா..
மத்ததெல்லாம் மத்ததெல்லாம் இவருக்கு கொசிரு..

ஒரே ஒரு ஊரிலே..ஒரே ஒரு ஐயா..
ஒரே ஒரு ஐயாவுக்கு..ஒரே ஒரு அம்மா..

அக்கா இருக்காங்களே எங்க அக்கா..
பூச்சிய பாத்தாலே சிலரு புத்தி மாறி போவாங்க..
பூகம்பமே வந்தாலும் அக்கா பூத்தொடுத்து நிப்பாங்க..
கொண்டதுவும் ஒரு கொழந்தை..
கொடுத்தவனும் ஒரு கொழந்தை.. 
தொலையட்டும் கழுதைங்கனு.. தொல்லையெல்லாம் பொறுப்பாங்க..
எங்கக்கா எங்களுக்கு பரிசா..
எங்கக்கா மனசோட இமயமலை சிறுசு..

எங்க அம்மா இருக்காளே எங்க அம்மா..
பொறந்து வரும்போதே சிலரு வரம் வாங்கி வருவாங்க..
பொறந்து வரும்போதே சிலரு வரம் தருவே வருவாங்க..
வரமா வந்தம்மா..
வாஞ்சை உள்ள தங்கம்மா..
சிட்டெறும்ப நசுக்காத சிங்கம் தான் எங்கம்மா..
மறுபிறவி உண்டுன்னா  எனக்கென்ன வேணும்..
இந்த மகளுக்கோ தாய்க்கோ நான் மகனாக வேணும்....

ஒரே ஒரு ஊரிலே..ஒரே ஒரு ஐயா..
ஒரே ஒரு ஐயாவுக்கு..ஒரே ஒரு அம்மா..
ஒரே ஒரு அம்மா பெத்தா ஒரே ஒரு பொண்ணு..
அவ பொண்ணு இல்ல பொண்ணு இல்ல கடவுளோட கண்ணு..




..................



Songs lyrics from abiyum naanum movie:-