VAA VAA EN DEVATHAIYE
வா வா என் தேவதையே
Movie: Abiyum Naanum
Singers: Madhubalakrishnan
Music director: Vidyasagar
வா வா என் தேவதையே..
பொன் வாய் பேசும் தாரகையே..
பொய் வாழ்வின் பூரணமே..
பெண் பூவே வா..
வா வா என் தேவதையே..
பொன் வாய் பேசும் தாரகையே..
பொய் வாழ்வின் பூரணமே..
பெண் பூவே வா..
வான் மிதக்கும் கண்களுக்கு.. மயிலிறகால் மை இடவா..
மார்புதைக்கும் கால்களுக்கு.. மணி கொலுசு நான் இடவா..
வா வா என் தேவதையே..
பொன் வாய் பேசும் தாரகையே..
பொய் வாழ்வின் பூரணமே..
பெண் பூவே வா..
செல்வமகள் அழுகை போல்.. ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை..
பொன்மகளின் புன்னகை போல்..
யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை..
என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை..
முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு முந்நூறு மொழிகளில் வார்த்தையில்லை..
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா..
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே..
வா வா என் தேவதையே..
பொன் வாய் பேசும் தாரகையே..
பொய் வாழ்வின் பூரணமே..
பெண் பூவே வா..
பிள்ளை நிலா பள்ளி செல்ல..
அவள் பையோடு என் இதயம் துடிக்க கண்டேன்..
தெய்வமகள் தூங்கையிலே..
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்..
சிற்றாடை கட்டி அவள் சிரித்தபோது என்னை பெற்றவள் சாயல் என்று பேசி கொண்டேன்..
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள் மீசையில்லாத மகன் என்று சொன்னேன்..
பெண்பிள்ளை தனியறை புகுந்ததிலே..
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்து கொண்டேன்..
வா வா என் தேவதையே..
பொன் வாய் பேசும் தாரகையே..
பொய் வாழ்வின் பூரணமே..
பெண் பூவே வா..
வா வா என் தேவதையே..
பொன் வாய் பேசும் தாரகையே..
பொய் வாழ்வின் பூரணமே..
பெண் பூவே வா..
வாள் மிதக்கும் கண்களுக்கு.. மயிலிறகால் மை இடவா..
மார்புதைக்கும் கால்களுக்கு.. மணி கொலுசு நான் இடவா..
..................
Songs lyrics from abiyum naanum movie:-
