PA PA PAPPA

ப ப ப பப்பா


Movie: Deiva thirumagal 

Singers: Vikram

Music director: G.V.Prakash kumar 


ப ப ப பாப்பாபாப்பா..வருதே எனக்கு பாப்பா..
அப்பப்பப்பா அப்பா அப்பா அப்பா புதுசாக பொம்மை கேப்பா
இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும் தூளு தூளுதாம்ப்பா ஹா ஹா ஹா 

ப ப ப பாப்பாபாப்பா..வருதே எனக்கு பாப்பா..
அப்பப்பப்பா அப்பா அப்பா அப்பா புதுசாக பொம்மை கேப்பா
இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும் தூளு தூளுதாம்ப்பா

என்ன கிருஷ்ணா இவ்ளோ பணம்..என்ன வாங்க போற

கண்ணுக்கு கண்ணுக்கு மை வாங்க
காலுக்கு கொலுசுதான் வாங்க
ஆ அப்புறம் ஏதோ சொன்னாங்க
ஐயையோ மறந்தேங்க
கை சட்டை வாங்க போறேன்
கவனுதான் வாங்க போறேன் 
கடை தெருவ தேடி போறேன்  குதிர மேல

எல்லாம் பாப்பாவுக்குதானா.. பானுக்கு ஒன்னும் இல்லையா 

ம் இருக்கு..ஆப்பிள் நான் வாங்க போறேன்
ஹார்லிக்சும் வாங்க போறேன் 
அவள நான் தாங்க போறேன்  கொழந்தை போல

கழுத்துக்கு கழுத்துக்கு மணி வாங்க
இடுப்புக்கு அருணாகொடி வாங்க
அப்புறம் ஏதோ சொன்னாங்க ஆஆ இது தாங்க

ஓ இதுவும் பானுக்கா..

ஆ ஆ இல்ல பாப்பாவுக்கு

ப ப ப பாப்பபாப்பா..வருதே எனக்கு பாப்பா..
அப்பப்பப்பா அப்பா அப்பா அப்பா புதுசாக பொம்மை கேப்பா
இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும் தூளு தூளுதாம்ப்பா ஹா ஹா ஹா 

ஏன் கிருஷ்ணா..பாப்பா அப்பா மாதிரி இருக்கணுமா..
அம்மா மாதிரி இருக்கணுமா

அப்பா போல வேணாமே
அம்மா போல வேணாமே 
ரெண்டும் கலந்து இருக்கணுமே
அழகா சிரிக்கணுமே ஹா ஹா ஹா ஹா

இதான் அந்த அழகான சிரிப்பா

குழந்தை பொறக்க போது எங்களுக்கெல்லாம் என்ன வாங்கி தருவ

சாக்லேட்டு வாங்கி தருவேன்
ஊட்டிக்கே ஊட்டி விடுவேன்
வேறென்ன வாங்கி தருவேன் 
அப்பறம் சொல்லுறேன்

சரி..குழந்தையோட என்ன பண்ணுவ

விளையாட கூட்டி வருவேன்
பழம் விட்டு டூவும் விடுவேன்
அப்புறம் நான் என்ன செய்வன்

என்ன செய்வ

பானுவ கேட்டு சொல்றன்

ஆமா..இனிமே பானுவோட விளையாட மாட்டியா

பத்து மாசம் பொறுக்கணுமாம்
பாப்பா நல்லா வளரணுமாம்
அதுவரை சும்மா இருக்கணுமாம்
டாக்டர் சொன்னாங்க

இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும் தூளு தூளுதாம்ப்பா ஹா ஹா ஹா




....................



Songs lyrics from deiva thirumagal movie:-