KADHA SOLLA PORAN

 கத சொல்ல போறேன்



Movie: Deiva thirumagal 

Singers: Vikram, Shringa

Music director: G.V.Prakash kumar 


கத சொல்ல போறேன்.. 
கத சொல்ல போறேன்..

என்ன கதப்பா?

ராஜா ராணி கத சொல்ல போறேன்
காக்கா குருவி கத சொல்ல போறேன் 

ராஜா கதையா? காக்கா கதையா?

என்ன கத..என்ன கத..

கதையா..அதெல்லாம் எதுக்கு..
சொல்லாத சொல்லாத..
யாராவது திருடி படமா எடுத்துட்டாங்கன்னா


ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்

ஒரு ஒரு ராஜாவா..ஊர்ல வேற யாரும் இல்லையா

ம்ம் இருக்காங்க..
ராஜாவோட மந்திரிங்க நாலு பேரும் கூஜாவாம்

கூஜாவா..

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ராஜாவோட மந்திரிங்க நாலு பேரும் கூஜாவாம்
நாட்டுல போர் வந்துது 
போருல சண்ட நடக்குது
நாட்டுல போர் வந்துது 
போருல சண்ட நடக்குது
சண்டையில் குண்டு வெடிக்குது டொம் டொம் டொம்

சண்டையா எதுக்கு

சண்ட தான் எதுக்கு நடந்துச்சு
சண்ட தான் எதுக்கு நடந்துச்சு 

காக்கா வடைய திருடிருச்சுல
அதான் அதான்

சண்ட தான் எதுக்கு நடந்துச்சு 
காக்கா வடைய திருடுச்சு
நரியும் தான் பாட சொல்லுச்சு சரிகமபா

காக்கா  பாடுச்சா

ஓ பாடாதா..சரி..கா கா கா..

ஐயோ வட போச்சே..காக்கா பாவம்ல..

ராஜா விடுவாரா..ஹா ஹா ஹா..
ராஜா பாட்டு பாட நரி வடைய போட 
நம்ம ராஜா கிட்ட காக்கா தேங்க்ஸ் சொல்லுச்சு
ஊரெல்லாம் சேர்ந்து கொண்டாட்டம்தான்
ஓ நரியோட திட்டம் திண்டாட்டம் தான்
நாடெல்லாம் வாழ்த்துதே ராஜா வாழ்க

ராஜா வாழ்க..ராஜா வாழ்க..

இது ராஜா கதையா..காக்கா கதையா..

காக்கா ராஜா கத..

காக்கா ராஜா வாழ்க..காக்கா ராஜா வாழ்க..

நெனச்சு நெனச்சு நான் கத சொல்ல
சிரிச்சு சிரிச்சு நீ அத கேக்க
இன்னும் கத இருக்கு என் கிட்ட
கேட்டு கேட்டு நீ பாராட்ட

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ராஜாவோட மந்திரிங்க நாலு பேரும் 

ஐயோ திரும்பவும் அதே ராஜா கதையா

இது அந்த ராஜா இல்ல..வேற ராஜா..

இந்த ராஜாக்கு என்ன கத..

சூப்பர் மேன் சூப்பர் மேன்
அத சொல்லாத அத சொல்லாத
அனகோண்டா கதய சொல்லு
அனகோண்டா கதய சொல்லு
யார் சார் யார் சார் ஆ டைனோசர்

நாட்டுல ரொம்ப நாளா டைனோசர் தொல்லைனு 
மக்கள் தான் ராஜா கிட்ட போனாங்க
டைனோசர வேட்டையாட சூப்பர் மேன போல மாறி 
ராஜாவ போக சொல்லி கேட்டாங்க
வழியெல்லாம் அனகோண்டா பயம் காட்டுது
அத தாண்டி போனாரு புயல் தாக்குது
வழியெல்லாம் அனகோண்டா பயம் காட்டுது
அத தாண்டி போனாரு புயல் தாக்குது
புயல் தாண்டி போனாரு புலி உறுமுது
ராஜாவின் சத்தத்தில் புலி பதுங்குது

டைனோசர் தான சாகணும்..புலி ஏன் செத்துச்சு

நாடெல்லாம் வாழ்த்துது ராஜா வாழ்க 

காக்கா ராஜா வாழ்க..காக்கா ராஜா வாழ்க..

அப்பா போதும்ப்பா..விட்டுடுப்பா..

முழிச்சி முழிச்சி நான் கத சொல்ல
மடக்கி மடக்கி நீ அத கேக்க
இன்னும்  கத இருக்கு என் கிட்ட
கேட்டு கேட்டு நீ பாராட்ட

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு ராஜாவாம்
ராஜாவோட கதய கேட்டு தூங்குது நிலாவாம்

திரும்ப திரும்ப நான் கத சொல்ல
தூங்கி தூங்கி நீ அத கேக்க