VIZHIGALIL ORU VANAVIL

விழிகளில் ஒரு வானவில் 


Movie: Deiva thirumagal

Singer: Saindhavi

Music director: G.V.Prakash kumar


விழிகளில் ஒரு வானவில்....
இமைகளை தொட்டு பேசுதே...
இது என்ன புது வானிலை..
மழை..வெயில்..தரும்....
உன்னிடம் பார்க்கிறேன்... 
நான் பார்க்கிறேன்..
என் தாய் முகம் அன்பே...
உன்னிடம் தோற்கிறேன்... 
நான் தோற்கிறேன்..
என்னாகுமோ...இங்கே...
முதன்முதலாய் மயங்குகிறேன்..
கண்ணாடி போல தோன்றினாய்...
என் முன்பு என்னை காட்டினாய்...
கனா எங்கும் வினா...

விழிகளில் ஒரு வானவில்....
இமைகளை தொட்டு பேசுதே...
இது என்ன புது வானிலை..
மழை..வெயில்..தரும்....
                                               
நீ வந்தாய் என் வாழ்விலே..
பூ பூத்தாய் என் வேரிலே..
நாளையே நீ போகலாம்..
என் ஞாபகம் நீ ஆகலாம்..
ஏ..சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ..
யார் இவன்..யாரிவன்..ஓர் மாயவன்..
மெய்யானவன்..அன்பில்..
யார் இவன்..யாரிவன்..நான் நேசிக்கும்..
கண்ணீர் இவன் நெஞ்சில்...
இனம் புரியா...உறவிதுவோ..
என் தீவில் பூத்த பூவிது...
என் நெஞ்சில் வாசம் போவது..
மனம் எங்கும் மணம்..

விழிகளில் ஒரு வானவில்..
இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை..
மழை..வெயில்..தரும்..
                                               
நான் உனக்காக பேசினேன்..
யார் எனக்காக பேசுவார்..
மௌனமாய் நான் பேசினேன்..
கைகளில் மை பூசினேன்..
நீ வந்த கனவெங்கே..காற்றில் கை வீசினேன்...
அன்பென்னும் தூண்டிலை..நீ வீசினாய்..
மீனாகிறேன் அன்பே..
உன் முன்பு தானடா..இப்போது நான் பெண்ணாகிறேன் அன்பே..
தயக்கங்களால்..திணறுகிறேன்...
நில்லென்று சொன்ன போதிலும்..
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே..
இதோ..உந்தன் வழி..



............




Songs from deiva thirumagal movie:-