JAGADA THOM
ஜகட தோம்
Movie: Deiva thirumagal
Singers:: S.P.Balasubramaniam
Music director: G.V.Prakash kumar
ஆண்: ஜகடதோம் ஜகடதோம்
வாழ்க்கையே போர்க்களம்
ஜகடதோம் ஜகடதோம்
எழுதுவோம் சரித்திரம்
நடந்து நடந்து கால் தேயலாம்
விழித்து விழித்து கண் மூடலாம்
இருந்த போதும் வா போரிலே மோதலாம்
ஆ&பெ: இருட்டை விரட்ட ஒரு சூரியன்
அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை கூடலாம் கூடலாம்
ஆண்: ஜகடதோம் ஜகடதோம்
வாழ்க்கையே போர்க்களம்
பலகோடி காலங்கள் மண்ணுக்குள் வாழ்ந்தாலே
கரிதுண்டு வாழ்க்கை ஒருநாள் வைரமாக மாறும்
வரலாற்றில் எந்நாளும் வலி இன்றி வாழ்வில்லை
வலிதானே வெற்றியில் ஏற ஏணி ஒன்று போடும்
தீமையை தீயிட தீமையை நாடிடு
குற்றம் அதில் இல்லை
தோட்டத்தை காத்திட வேலியில் முட்களை வைத்தால் தவறில்லை
கண்ணில் கார்காலம் ஓ இன்றே மாறாதோ
நெஞ்சில் பூக்காலம் ஓ நாளை வாராதோ
நடந்து நடந்து கால் தேயலாம்
விழித்து விழித்து கண் மூடலாம்
இருந்த போதும் வா போரிலே மோதலாம்
ஆ&பெ: இருட்டை விரட்ட ஒரு சூரியன்
அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை கூடலாம் கூடலாம்
ஆண்: ஜகடதோம் ஜகடதோம்
வாழ்க்கையே போர்க்களம்
முடியாத பாதைதான் கிடையாது மண் மீது
முன்னேறும் நதிகள் எல்லாம் பள்ளம் பார்த்திடாது
விடியாத நாட்கள் தான் கிடையாது விண்மீது
விழி சிந்தும் ஈரம் பட்டு நெஞ்சம் மூழ்கிடாது
ஆலயம் என்பது கோபுர வாசலும் சிலையும் மட்டும் தான்
அதை மேல் ஏது ஆண்டவன் வாழ்வது நல்லோர் உள்ளம்தான்
தாய்மை என்றாலும் ஓ உன்போல் ஆகாது
உண்மை நெஞ்சம் தான் ஓ உன்னைபோல் ஏது
ஆ&பெ: நடந்து நடந்து கால் தேயலாம்
விழித்து விழித்து கண் மூடலாம்
இருந்த போதும் வா போரிலே மோதலாம்
இருட்டை விரட்ட ஒரு சூரியன்
அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை கூடலாம் கூடலாம்
ஆண்: ஜகடதோம் ஜகடதோம்
வாழ்க்கையே போர்க்களம்
ஜகடதோம் ஜகடதோம்
எழுதுவோம் சரித்திரம்
...................
Songs lyrics from Deiva thirumagal movie:-
