ALAIKA LAIKA

 அலைக்கா லைக்கா


Movie: Thuppakki 

Singers: Javed ali,  Sayanora Philip 

Music director: Harris jayaraj 


ஆண்: அலைக்கா லைக்கா..
ஆப்பிளின் மேக்கா..
கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா..
அலைக்கா லைக்கா..
ஆப்பிளின் மேக்கா..
கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா..
சனா சனா ஓ சனா..
நீ சுவாசம் கொண்ட மூனா..
கனா கனா நீதானா..
கண்டாடும் கண்கள் தானா..
ஃபிலிம் ஃபிலிம் காட்டியே ஃபீலிங்ஸ் ஏத்தாதே..
அனல் மூட்டியே கனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே..

பெண்: மானே.. மானே..
ஹனிமூனும் எங்கே மானே..
ஜானே ஜானே அது காட்டு பக்கம் தானே..
தேனே.. தேனே..
இது தித்திப்பான தேனே..
தீவே..தீவே ..
இனி முற்றும் இசை தானே..

பெண்: என் நெற்றி பொட்டில் முத்தம் வைக்க உயிரை வைக்கின்றானே..
நான் பிச்சு பிச்சு பேசும் தமிழை கவிதை என்கின்றானே..

ஆண்: நீ மைனர் இல்லை மேஜர் என்று சொல்லும் உந்தன் நெஞ்சம்..
நீ மேஜர் ஆனால் நானும் கூட மைனர் ஆவேன் கொஞ்சம்..

பெண்: இனி அவனே தான் அவனே தான் எனக்கான நண்பன்..
முன் இருந்தாலும் முகம் காட்டி சிரிக்காத கள்வன்..

ஆண்: ஏ காற்றுக்கென்ன கஷ்டம்..
பனிபூவுக்கும் தான் இஷ்டம்..
இதில் தேனுக்கில்லை நஷ்டம்
சேர வா வா நீ வா

பெண்: அலைக்கா லைக்கா..
ஆப்பிளின் மேக்கா..
கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா..

ஆண்: சனா சனா ஓ சனா..
நீ சுவாசம் கொண்ட மூனா..

பெண்: கனா கனா நீதானா..
கண்டாடும் கண்கள் தானா..

ஃபிலிம் ஃபிலிம் காட்டியே ஃபீலிங்ஸ் ஏறாதோ..
அனல் மூட்டியே கனல் கூட்டியே சுட்டு பொசுக்காதோ..

ஆண்: நீ தொட்டு பேசும் ஹார்ட்டுக்குள்ளே மைனஸ் டிகிரி வெப்பம்..
நீ ஆக்ஸிஜனில் சுவாசத்தாலே வாசம் சேர்க்கும் நுட்பம்..

பெண்: என் பக்கம் நிற்கின்றது விண்ணை தொடும் வீரம்..
அவன் பேரின் முன்னால் என் பேர் சேர இல்லை ரொம்ப தூரம்..

ஆண்: நீ இனிப்பான உரைப்பான அகர்வாலு அல்வா..
இனி இவன் பார்க்க இடம் கேட்க இதழ் சேர்த்து கொள்வாள்..

பெண்: என் மெத்தை அவன்தானே 
அவன் நெஞ்சில் ஒட்டிப்பேனே..
இனி கொஞ்சி கொல்லுவானே..
முத்த தேன் நான் சேர்ப்பேன்..

பெண்: அலைக்கா லைக்கா..

ஆண்: அலைக்கா லைக்கா..
ஆப்பிளின் மேக்கா..
கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா..

பெண்: சனா சனா ஓ சனா..
நான் சுவாசம் கொண்ட மூனா..
கனா கனா நீதானா..
கண்டாடும் கண்கள் தானா..

ஆண்: ஃபிலிம் ஃபிலிம் காட்டியே ஃபீலிங்ஸ் ஏத்தாதே..
அனல் மூட்டியே கனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே..

பெண்: மானே.. மானே..
ஹனிமூனும் எங்கே மானே..
ஜானே ஜானே அது காட்டு பக்கம் தானே..
தேனே.. தேனே..
ஏ தித்திப்பான தேனே..
தீவே..தீவே ..
இனி முற்றும் இசை தானே..




......................



Songs lyrics from Thuppakki movie: