OH AYIYE AYIYE
ஓ ஆயியே ஆயியே
Movie: Ayan
Singers: Benny dayal, Haricharan, Chinmayi
Music director: Harris jayaraj
ஆண்: ஓ ஆயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூ மழை நெஞ்சிலே..
ஓ வாசமே சுவாசமே வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே..
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து..
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ..
என் கையில் வளைந்து என் மீது மிதந்து சாலையில் நடக்கின்ற நிலவு நீ..
நீயும் நீயும் அடி நீதானா..
நீல நீல நிற தீ தானா..
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா..
நீயும் நீயும் அடி நீதானா..
நீல நீல நிற தீ தானா..
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா..
பெண்: ஓ ஆயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூ மழை நெஞ்சிலே..
ஓ வாசமே சுவாசமே வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே..
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து..
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ..
என் கையில் வளைந்து என் மீது மிதந்து..
மாலையில் நடக்கின்ற நினைவு நீ..
ஆண்: ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்..
மறுகண்ணில் மறுகண்ணில் மதுரமும்..
சுமக்கின்ற சுமக்கின்ற அழகியலே..
பெண்: ஒரு கையில் ஒரு கையில் நகங்களும்..
மறு கையில் மறு கையில் சுகங்களும்..
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே..
ஆண்: இதழ் பூவென்றால் அதில் தேன் எங்கே..
இங்கு பூவே தான் தேன் தேன் தேன் தேன்..
ஆண்: ஓ ஆயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூ மழை நெஞ்சிலே..
ஓ வாசமே சுவாசமே வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே..
பெண்: ஓ நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து..
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ..
என் கையில் வளைந்து என் மீது மிதந்து..
மாலையில் நடக்கின்ற நினைவு நீ..
பெண்: இமைக்காத இமைக்காத கண்களும்..
எனக்காக எனக்காக வேண்டி..
உனைகண்டு உனைகண்டு ரசித்தேனே..
ஆண்: முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்..
இதழ் மொத்தம் இதழ் மொத்தம் வெந்ததும்..
அதை எண்ணி அதை எண்ணி இளித்தேனே..
பெண்: சுடும் பூங்காற்றே..சுட்டு போகாதே..
இனி நானிங்கே மழைசாரல் பூவாய்..
ஆண்: ஓ ஆயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூ மழை நெஞ்சிலே..
பெண்: ஓ வாசமே சுவாசமே வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே..
ஆண்: நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ..
பெண்: என் கையில் வளைந்து என் மீது மிதந்து..
மாலையில் நடக்கின்ற நினைவு நீ..
ஆண்: நீயும் நீயும் அடி நீதானா..
நீல நீல நிற தீ தானா..
நீயும் நீயும் அடி நீதானா.. ஓ..
நீயும் நீயும் அடி நீதானா..
நீல நீல நிற தீ தானா..
நீயும் நீயும் அடி நீதானா.. ஓ..
நீயும் நீயும் அடி நீதானா..
...................
Songs lyrics from ayan movie:-
