NENJE NENJE

 நெஞ்சே நெஞ்சே


Movie: Ayan

Singers:Mahathi, harish ragavendra 

Music director: Harris jayaraj 


பெண்:  நெஞ்சே..நெஞ்சே..நீ எங்கே..
நானும் அங்கே..என் வாழ்வும் அங்கே..
அன்பே..அன்பே..நான் இங்கே..
தேகம் இங்கே..மெய் ஜீவன் எங்கே..

ஆண்:  என் நதியே என் கண் முன்னே வற்றி போனாய்..
வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்..
என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய்..

பெண்: ஓ..நெஞ்சே.. நெஞ்சே..நீ எங்கே..
நானும் அங்கே..என் வாழ்வும் அங்கே..
                                

ஆண்: கண்ணே..என் கண்ணே நான் உன்னை காணாமல்..
வானும் இம்மண்ணும் பொய்யாக கண்டேனே..

பெண்: அன்பே..பேரன்பே..நான் உன்னை சேராமல்..
ஆவி..என் ஆவி நான் இற்று போனேனே..

ஆண்: வெயில்காலம் வந்தால்தான் நீரும் தேனாகும்..
பிரிவொன்று கண்டால்தான் காதல் ருசியாகும்..

பெண்: உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளும்..
உன் மூச்சு படும் நேரம் என் தேகம் மணலாகும்..

ஆண்: நெஞ்சே..நெஞ்சே..நீ  இங்கே..
நானும் அங்கே..என் வாழ்வும் அங்கே..
அன்பே..அன்பே..நான் இங்கே..
தேகம் இங்கே..மெய் ஜீவன் எங்கே..

                                 
பெண்: கள்வா..ஏ..கள்வா..நீ காதல் செய்யாமல்..
கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே..

ஆண்: காதல்..மெய் காதல்..அது பட்டு போகாதே..
காற்று நம் பூமி தனை விட்டு போகாதே..

பெண்: ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்..
ஆனால் நீ மனம் மாறி போக கூடாதே..

ஆண்:  ஏ..  மஞ்சள் தாமரையே..என்  உச்ச தாரகையே..
கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறாதே..

பெண்:  நெஞ்சே..நெஞ்சே..நீ எங்கே..
நானும் அங்கே...என் வாழ்வும் அங்கே..

ஆண்: அன்பே..அன்பே..நான் இங்கே..
தேகம் இங்கே..மெய் ஜீவன் எங்கே..

என் நதியே என் கண் முன்னே வற்றி போனாய்..
வான் மழையாகி எனை தேடி மண்ணில் வந்தாய்..
என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய்..



..................

                             


Songs lyrics from Ayan movie:-