NENACHAPADI NENACHAPADI

 நெனச்சபடி நெனச்சபடி 



Movie:  Kadhalar dhinam 

Singers: M.G.Sreekumar, Srinivas, Ganga, Sitharasu, kanchana

Music director  :  A.r.rahman 


நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி..
உனக்கென பிறந்தானோ உயிருடன் கலந்தானோ..
உனக்கென பிறந்தானோ உயிருடன் கலந்தானோ..

நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி..
உனக்கென பிறந்தாளோ உயிருடன் கலந்தாளோ..
உனக்கென பிறந்தாளோ உயிருடன் கலந்தாளோ..

என் தோள்களே தோட்டம் என்று..
எந்நாளுமே தொத்தி கொள்ளும்..
காற்றல்லவா நீ என் கண்ணே..
கல்யாண நாளில் மாலை கொள்ள
கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல..
அந்த வானம் நந்தவனம் ஆகும்

மருதாணி கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் போட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு..
மருதாணி கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் போட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு..

உன் கணவன் நாளை தான் வர வேண்டும் 
உயிர் காதல் நெஞ்சையே தரவேண்டும் 
மணபந்தல் தோரணம் நான் போட
மணவாளனோடு உன் கை கூட
உன் தந்தை உள்ளம்தான் ஊஞ்சல் ஆட

காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை..
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையில் இல்லை..
காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை.. 
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையில் இல்லை..
வாழ்வு தந்த வள்ளல்..
வாங்கி கொண்டு போக..
வாழ்த்து சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக..

என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்..
உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்..
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்..
உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்..
இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே
என் காதல் வாழும்..
நீ வாழ்க..நலமாக..நீ வாழ்க..நலமாக..

நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி..
உனக்கென பிறந்தானோ உயிருடன் கலந்தானோ..
உனக்கென பிறந்தானோ உயிருடன் கலந்தானோ..

நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி..
உனக்கென பிறந்தாளோ உயிருடன் கலந்தாளோ..
உனக்கென பிறந்தாளோ உயிருடன் கலந்தாளோ..

அல்லி விழியோரம் அஞ்சனத்தை தீட்டி..
அந்தி வண்ண பின்னல் மீது தாழை மலர் சூட்டி..
அல்லி விழியோரம் அஞ்சனத்தை தீட்டி..
அந்தி வண்ண பின்னல் மீது தாழை மலர் சூட்டி..
ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி..
அன்னமிவள் மேடை வந்தாள் மின்னல் முகம் காட்டி..
கெட்டிமேளம் கொட்டிட மணப்பெண்ணை தொட்டு தாலி கட்டினான் மாப்பிள்ளை...
கெட்டிமேளம் கொட்டிட மணப்பெண்ணை தொட்டு தாலி கட்டினான் மாப்பிள்ளை...
இந்த ஏழை நெஞ்சமும் நீ வாழ என்றும் பூக்கள் தூவும்..
நீ வாழ்க..நலமாக..

நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி..
உனக்கென பிறந்தானோ உயிருடன் கலந்தானோ..
உனக்கென பிறந்தானோ உயிருடன் கலந்தானோ..

நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி..
உனக்கென பிறந்தாளோ உயிருடன் கலந்தாளோ..
உனக்கென பிறந்தாளோ உயிருடன் கலந்தாளோ..

மருதாணி கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் போட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு..
மருதாணி கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் போட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு..



................



Songs lyrics from kadhalar dhinam movie:-