KAI THATTI THATTI

 கை தட்டி தட்டி


Movie: Jodi 

Singers: Srinivas, Timmy

Music director:A.r.rahman 


கை தட்டி தட்டி அழைத்தாளே..
என் மனதை தொட்டு தொட்டு திறந்தாளே..
என் உயிரை மெல்ல துளைத்து நுழைந்தாளே..
ஜீவன் கலந்தாளே..
அந்த தேன்குயிலே..

தரரம்பம் தரரம்பம் தரரம்பம்...
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்..
பெண் எப்போதும் சுகமான துன்பம்..
பொன் வானெங்கும் அவளின் பிம்பம்..

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்..
வாழ்வு மரணத்தை வெல்லும்..

தரரம்பம் தரரம்பம் தரரம்பம்...
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்..

ரத்தினத்து தேரானாள்..
என் மனசுக்குள் சத்தமிடும் பூவானாள்..
என் பருவத்தை பயிர் செய்யும் நீரானாள்..
என் நெஞ்ச குளத்தில்..பொன் கல்லை எறிந்தாள்..
அலை அடங்கும்முன்..நெஞ்சத்தில் குதித்தாள்..
விழியால்..நெஞ்சுடைத்துவிட்டாள்..
ஸ்பரிசங்களால் பின்.. இணைத்துவிட்டாள்..

தரரம்பம் தரரம்பம் தரரம்பம்...
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்..
பெண் எப்போதும் சுகமான துன்பம்..
பொன் வானெங்கும் அவளின் பிம்பம்..
ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்..
வாழ்வு மரணத்தை வெல்லும்..
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்...
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்..

தரரம்பம் தரரம்பம் தரரம்பம் தரரம்பம்பம் பம்பம்பம்பம்..
தரரம்பம் தரரம்பம் தரரம்பம் தரரம்பம்பம் 
பம்பம்பம்பம்..

பால்வண்ண நிலவெடுத்து.. 
பாற்கடலில் பலமுறை சலவை செய்து..
பெண்ணுருவாய் பிறந்தவள் அவள்தானோ..
என் கவிதைகளில்..கண் மலர்ந்தவளோ..
என் மௌனங்களை.. மொழி பெயர்த்தவளோ..
அழகை தத்தெடுத்தவளோ..
என் உயிர் மலரை தத்தரித்தவளோ..

தரரம்பம் தரரம்பம் தரரம்பம்...
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்..
பெண் எப்போதும் சுகமான துன்பம்..
பொன் வானெங்கும் அவளின் பிம்பம்..

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்..
வாழ்வு மரணத்தை வெல்லும்..

தரரம்பம் தரரம்பம் தரரம்பம்...
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்..

..........


Songs  lyrics from Jodi movie:-