ORU POIYAVADHU

 ஒரு பொய்யாவது


Movie: Jodi

Singer:Hariharan 

Music director:A.r.rahman 


ஒரு பொய்யாவது சொல் கண்ணே..
உன் காதல் நான்தான் என்று..
அந்த சொல்லில்..
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்..
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்..

ஒரு பொய்யாவது சொல் கண்ணே..
உன் காதல் நான்தான் என்று..
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்..

ஒரு பொய்யாவது சொல் கண்ணே..
உன் காதல் நான்தான் என்று..
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்..

பூக்களில் உன்னால் சத்தம்..
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்..
இதை தாங்குமா என் நெஞ்சம்..
இதை தாங்குமா என் நெஞ்சம்..

பெண்மையும் மென்மையும் பக்கம் பக்கம்தான்..
ரொம்ப பக்கம் பக்கம்தான்..
பார்த்தால் ரெண்டும் வேறு தான்..
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்..
பார்க்கும் கண்கள் ஒன்றுதான்..
உண்டால் ரெண்டும் வேறு தான்..

ஒரு பொய்யாவது சொல் கண்ணே..
உன் காதல் நான்தான் என்று..
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்..

இரவினை திரட்டி....ஓ...
இரவினை திரட்டி கண்மணியின் குழல் செய்தானோ..
கண்மணியின் குழல் செய்தானோ..
நிலவின் ஒளி திரட்டி கண்கள் செய்தானோ..ஓ..
விண்மீன் விண்மீன் கொண்டு..
விரலில் நகம் சமைத்து..
மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ..
வாடைகாற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு தங்கம் தங்கம்  பூசி தோல் செய்தானோ..
ஆனால்....பெண்ணே....
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ..
காதல் கண்ணே... உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ..



நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே..
அருகில் காட்டியது நீதானே..
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே..
ஓ..காற்று பூமி வானம்..காதல் பேசும் மேகம்..
அறிமுகம் செய்தவள் யார் யார்..
என் அன்பே நீதானே..
கங்கை கங்கை ஆற்றை..கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றை கண்ணில் கையில் தந்தவள் நீதானே..
ஆனால்...பெண்ணே..
நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ..
காதல் கண்ணே...நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ..

ஒரு பொய்யாவது சொல் கண்ணே..
உன் காதல் நான்தான் என்று..
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்..
ஒரு பொய்யாவது சொல் கண்ணே..
உன் காதல் நான்தான் என்று..
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்..
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்..
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்..
நான் உயிர் வாழ்வேன்..
உயிர் வாழ்வேன்..
அந்த ஒரு சொல்..அந்த ஒரு சொல்..
அந்த ஒரு சொல்..அந்த ஒரு சொல்..
சொல்லில் அந்த சொல்லில்..
உயிர் வாழ்வேன்...
உயிர் வாழ்வேன்..
உயிர் வாழ்வேன்..


.........


Songs from Jodi movie:-