VELLI MALARE
வெள்ளி மலரே
Movie: Jodi
Singers:SPB, mahalakshmi iyer
Music director:A.r.rahman
பெண்: வெள்ளி மலரே..வெள்ளி மலரே..
வெள்ளி மலரே..வெள்ளி மலரே..
நேற்று வரை நீ நெடுவனம் கண்டாய்..
ஒற்றை காலில் உயரத்தில் நின்றாய்..
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்..
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்..
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ..
தேன் சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ..
ஆண்: இளந்தளிரே..இளந்தளிரே..
வெள்ளி மலரன்று இயற்றிய தவமெதற்கு..
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு..
இளந்தளிரே..இளந்தளிரே..
வெள்ளி மலரன்று இயற்றிய தவமெதற்கு..
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு..
பெண்: ஓ..ஓ..
ஆண்: வெள்ளி மலரே..வெள்ளி மலரே..
ஆண்: மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்..
கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்..
நெஞ்சுடைந்த பூவே நில்..
பெண்: வெட்கம் கெட்ட தென்றலுக்கு வேலையில்லை..
தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை..
ஆடை கொள்ள பார்ப்பீர்..ஐயோ..தள்ளி நில்..நில்..
ஆண்: வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே..
தேன் விட்டு பேசாய் உயிருள்ள மலரே..
உனை கண்டு உயிர் தேன் சொட்டுதே.. சொட்டுதே..
பெண்: வெள்ளி மலரே..வெள்ளி மலரே..
வெள்ளி மலரே.. வெள்ளி மலரே..
பெண்: வனங்களில் பூந்தளிர் தேடும்போதும்..
நதிகளில் நீர் குடைந்தாடும் போதும்..
உந்தன் திசை தேடும் விழிகள்..
ஆண்: தொலைவினில் தரை தொட்டு ஆடும் மேகம்..
அருகினில் செல்ல செல்ல ஓடி போகும்..
நீயும் மேகம்தானா...நெஞ்சை தொட்டு சொல்..சொல்..
பெண்: மழையிலும் கூவும் மரகத குயில் நான்..
இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்..
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்..
ஆண்: வெள்ளி மலரே..வெள்ளி மலரே..
பெண்: நேற்று வரை நீ நெடுவனம் கண்டாய்..
ஒற்றை காலில் உயரத்தில் நின்றாய்..
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்..
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்..
இத்தனை தவங்கள் ஏன் தான் செய்தாயோ..
தேன் சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ..
ஆண்: இளந்தளிரே..இளந்தளிரே..
வெள்ளி மலரன்று இயற்றிய தவமெதற்கு..
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு..
வெள்ளி மலரே..... வெள்ளி மலரே.....
...........
Songs from Jodi movie:-
