MARRIAGE ENDRAL
மேரேஜ் என்றால்
Movie: Vaseegara
Singers: Karthik
Music director: S.A.Rajkumar
ஆண்: மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா..
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா..
ஏ வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா..
வாங்க வாங்க என்று சொல்லணும்..
சொல்லி சொல்லி வாயும் வலிக்கனும்..
வந்தவங்க வயிறு நெறையனும்..
வாழ்த்து சொல்லி நெஞ்சும் நெறையனும்..
ஒரு நாள் கூத்து என்றுதான் இந்த கல்யாணத்தை உனக்கு யாரு சொன்னது..
திருநாள் பத்து என்றுதான் இந்த கல்யாணத்தை திருக்குறள் நேற்று சொன்னது..
ஏ சுந்தரேசா..
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா..
வானவில்லக் கொண்டு வந்து வளைச்சுக்கட்டி பந்தல் போடு..
விண்மீன் எல்லாம் கூட்டி வந்து சீரியல் பல்ப்பா மாத்தி போடு..
ஆகாயம் பார்த்து சூரியன் கேட்டு ஆரத்தி தட்டாயிடு..
வந்தோருக்கெல்லாம் முத்துக்கள் அள்ளி அட்சத பூவா போடு..
உள்ள சொந்தம் எல்லாம் சேர்ந்து வந்து திருமணத்த நடத்துறப்போ..
அடடா ஆட்டம் பாட்டம் தான் அந்த கல்யாணமே
அழகா பூத்த தோட்டம் தான்..
அடடா ஆட்டம் பாட்டம் தான் அந்த கல்யாணமே
அழகா பூத்த தோட்டம் தான்..
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா..
நம்ம வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா..
ஏ வெள்ளிக்காசு அள்ளித் தந்தா பந்தல் போட ஆள் கெடைக்கும்..
நேரில் சென்று கூப்பிட்டா தான் பந்தல் உள்ள ஆள் இருக்கும்..
அட்வான்ஸ் தந்தா அழகான காரு ஊர்கோலம் போக வரும்..
அன்புள்ளம் கொண்ட சொந்தங்கள் தானே காரோடு கூட வரும்..
ஏ பல ராப்பகலா கண்முழிச்சு மேளசத்தம் கேக்குறப்போ..
அடடா ஆட்டம் பாட்டம் தான் அந்த கல்யாணமே
அழகா பூத்த தோட்டம் தான்..
அடடா ஆட்டம் பாட்டம் தான் அந்த கல்யாணமே
அழகா பூத்த தோட்டம் தான்..
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா..
ஏ வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா..
வாங்க வாங்க என்று சொல்லணும்..
சொல்லி சொல்லி வாயும் வலிக்கனும்..
வந்தவங்க வயிறு நெறையனும்..
வாழ்த்து சொல்லி நெஞ்சும் நெறையனும்..
ஒரு நாள் கூத்து என்றுதான் இந்த கல்யாணத்தை உனக்கு யாரு சொன்னது..
திருநாள் பத்து என்றுதான் இந்த கல்யாணத்தை திருக்குறள் நேற்று சொன்னது..
ஏ சுந்தரேசா..
........................
Songs lyrics from Vaseegara movie: