AAHA ENBARGAL
ஆஹா என்பார்கள்
Movie: Vaseegara
Singers: Shankar mahadevan
Music director: S.A.Rajkumar
ஆண்: பேரழகி என்றேதான் பெண் அவளை சொன்னாலோ..
சூரியனை பிறை என்று சொல்லுவதை போல் ஆகும்..
ஆகா என்பார்கள் அடடா என்பார்கள்..
அவளை பார்த்த எல்லோரும்..
மூன்றே வினாடி அவளை கண்டாலே..
நெஞ்சை தாக்கும் மின்சாரம்..
ஆகா என்பார்கள் அடடா என்பார்கள்..
அவளை பார்த்த எல்லோரும்..
மூன்றே வினாடி அவளை கண்டாலே..
நெஞ்சை தாக்கும் மின்சாரம்..
மூச்சுவிடும் ரோஜா பூ பார்த்ததில்லை யாரும் தான்..
அவளை வந்து பார்த்தாலே அந்த குறை தீரும் தான்..
ஆகா என்பார்கள் அடடா என்பார்கள்..
அவளை பார்த்த எல்லோரும்..
மூன்றே வினாடி அவளை கண்டாலே..
நெஞ்சை தாக்கும் மின்சாரம்..
ஏ பதினேழு வயது முதல் வரும்
பதினெட்டு வயது வரை பெரும்
மாற்றங்கள் அத்தனையும் அவள்
அழகை கூட்டி விடுதே..
பார்வைக்குப் பட்ட இடம் அங்கும்
பார்க்காமல் விட்ட இடம் எங்கும்
பாதாமின் வண்ணம் அது பொங்கும்
கண்களுக்குள் சுடுதே..
ஒரு ஐநூறு நாளான தேனானது
அவள் செந்தூரம் சேர்க்கின்ற இதழ் ஆனது..
ஆகா என்பார்கள் அடடா என்பார்கள்..
அவளை பார்த்த எல்லோரும்..
மூன்றே வினாடி அவளை கண்டாலே..
நெஞ்சை தாக்கும் மின்சாரம்..
ஏஏ போர்க்கப்பல் போல இரு இமை
மீன் தொட்டி போல இரு விழி
பால் சிற்பி போல இரு இதழ்
சேர்ந்த அழகி அவள் தான்..
மின்காந்தம் போல ஒரு முகம்
ஊசி பூ போல ஒரு இடை
தங்கத்தூண் போல ஒரு உடல்
கொண்ட மங்கை அவள் தான்..
அவள் அழகென்ற வார்த்தைக்கு அகராதி தான்..
நான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதி தான்..
ஆகா என்பார்கள் அடடா என்பார்கள்..
அவளை பார்த்த எல்லோரும்..
மூன்றே வினாடி அவளை கண்டாலே..
நெஞ்சை தாக்கும் மின்சாரம்..
ஆகா என்பார்கள் அடடா என்பார்கள்..
அவளை பார்த்த எல்லோரும்..
மூன்றே வினாடி அவளை கண்டாலே..
நெஞ்சை தாக்கும் மின்சாரம்..
மூச்சுவிடும் ரோஜா பூ பார்த்ததில்லை யாரும் தான்..
அவளை வந்து பார்த்தாலே அந்த குறை தீரும் தான்..
