NENJAM ORUMURAI NEE ENDRADHU

நெஞ்சம் ஒருமுறை



Movie: Vaseegara

Singers: Srinivas, Mahalakshmi iyer

Music director:  S.A.Rajkumar


பெண்: நெஞ்சம் ஒரு முறை நீ என்றது.. 
கண்கள் மறு முறை பார் என்றது..
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது.. 
கண்கள் மறு முறை பார் என்றது..
ரெண்டு கரங்களும் சேர் என்றது..
உள்ளம் உனக்குத்தான் என்றது..
சத்தம் இன்றி உதடுகளோ..
முத்தம் எனக்குத் தா என்றது..
உள்ளம் என்ற கதவுகளோ..
உள்ளே உன்னை வா என்றது..

பெண்: நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து..
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்..

ஆண்:  நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து..
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம்.. 

பெண்: கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில்..
உன் முத்தம் தானே பற்றி கொண்ட முதல் தீ..

ஆண்:  கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த..
உன் விரல் தானே நானும் தொட்ட முதல் பூ..

பெண்: உன் பார்வை தானே எந்தன் நெஞ்சில் முதல் சலனம்..

ஆண்: அன்பே என்றும் நீயல்லவா..
கண்ணால் பேசும் முதல் கவிதை..

பெண்: காலம் உள்ள காலம்வரை..
நீதான் எந்தன் முதல் குழந்தை..

ஆண்: நெஞ்சம் ஒரு முறை நீ என்றது.. 

பெண்: கண்கள் மறு முறை பார் என்றது..

ஆண்: காதல் என்றால் அது பூவின் வடிவம்..
ஆனால் உள்ளே அது தீயின் உருவம்..

பெண்: காதல் வந்தால் இந்த பூமி நழுவும்.. 
பத்தாம் கிரகம் ஒன்றில் பாதம் பரவும்..

ஆண்: காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும்..
ஒரு தட்பவெட்ப மாற்றங்களும் நிகழும்..

பெண்: காதல் வந்து கண்ணை தட்டி எழுப்பும்..
அது ஊசி ஒன்றை உள்ளுக்குள்ளே அனுப்பும்..

ஆண்: இந்த காதல் வந்தால் இலை கூட மலை சுமக்கும்..

பெண்: காதல் என்ற வார்த்தையிலே ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்..
 காதல் என்ற காற்றினிலே தூசி போல நாம் அலைவோம்..

ஆண்: நெஞ்சம் ஒரு முறை நீ என்றது.. 

பெண்: கண்கள் மறு முறை பார் என்றது..

ஆண்: ரெண்டு கரங்களும் சேர் என்றது..

பெண்: உள்ளம் உனக்குத்தான் என்றது..

ஆண்: சத்தம் இன்றி உதடுகளோ..
முத்தம் எனக்குத் தா என்றது..

பெண்: உள்ளம் என்ற கதவுகளோ..
உள்ளே உன்னை வா என்றது..