VENA VENA
வேணா வேணா
Movie: Vaseegara
Singers: Udit narayan, Sadhana sargham
Music director: S.A.Rajkumar
ஆண்: வேணா வேணா விழுந்திடுவேனா..
கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா..
ஒருமுறை சிரிக்கிறாய் என் உயிரினை பறிக்கிறாய்..
கண்கள் ரெண்டும் அணுகுண்டா..
கத்திக்குள்ள பூச்செண்டா..
இன்பமான சிறை உண்டா..
ஈரவிழியில் இடம் உண்டா..
கடவுள் பூமி வந்தால் உன் கண்ணை பார்க்க வேண்டும்..
மனிதன் பாவம் என்று அவன் மெரண்டு போக வேண்டும்..
வேணா வேணா விழுந்திடுவேனா..
கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா..
ஆண்: வளையாத நதிகளில் எல்லாம் நதிகள் என்று ஆகாது..
சிணுங்காத கொலுசுகள் எல்லாம் சங்கீதங்கள் பாடாது..
பெண்: மடியினில் தலையணைை செய்தாய்..
மெல்ல வந்து மனதினில் கலவரம் செய்தாய்..
ஆண்: ஒரு கண்ணில் வன்முறை செய்தாய்..
பாவம் என்று மறு கண்ணில் மருந்துகள் தந்தாய்
பெண்: ஓஓ வசீகரா வசீகரா
நீ வதம் செய்ய நிதம் வர வேண்டும்
வளைக்கரம் உடைத்திட வேண்டும்..
ஆண்: இதயம் வருடி விடவா உன் இதயம் திருடி விடவா..
விழியில் நுழைந்து விடவா என் வழியை மறந்து விடவா..
வேணா வேணா விழுந்திடுவேனா..
கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா..
ஆண்: ஐயையோ ஹிட்லர் பெண்ணே
என்னை என்ன செய்தாயோ..
ஹார்மோன்கள் ஹார்மோனியங்கள் வாசிப்பதை கண்டாயோ..
பெண்: ஜனவரி நிலவென்னை கொல்லும்
வெட்கமின்றி ஜனகனமன சொல்லி செல்லும்..
ஆண்: குறுகுறு பார்வைகள் சொல்லும்
செய்தி என்ன கடவுளும் புலம்புவான் இன்னும்..
பெண்: ஓஓ..குண்டுமல்லி குண்டுமல்லி
அதில் பட்டு பட்டு பட்டாம்பூச்சி ஆனாய்..
தொட்டு தொட்டு குண்டு வைத்து போனாய்..
ஆண்: எனக்குள் உன்னை தொலைத்து நீ உனக்குள் என்னை தேடு..
இரண்டு உயிர்கள் இருந்தால் அது காதல் என்று கூறு..
வேணா வேணா விழுந்திடுவேனா..
கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா..
ஒருமுறை சிரிக்கிறாய் என் உயிரினை பறிக்கிறாய்..
கண்கள் ரெண்டும் அணுகுண்டா..
கத்திக்குள்ள பூச்செண்டா..
இன்பமான சிறை உண்டா..
ஈரவிழியில் இடம் உண்டா..
கடவுள் பூமி வந்தால் உன் கண்ணை பார்க்க வேண்டும்..
மனிதன் பாவம் என்று அவன் மெரண்டு போக வேண்டும்..
