CHINNA CHINNA KANGAL

 சின்ன சின்ன கண்கள்




Movie: G.O.A.T

Singers: Bhavatharini, Vijay

Music director:  Yuvan shankar raja 



பெண்: சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ..
கருவறை மீண்டும் மணக்கிறதோ..
எட்டு வைத்து வானம் வருகிறதோ..
தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ..
கண்ணே...இனி ஒரு போதும் பிரிவே இல்லை..
பிஞ்சே..நீ ஒரு கோடி தாயின் பிள்ளை..
உறவெல்லாம் ஒன்றாக..
விழியெல்லாம் தேனாக..
இருளெல்லாம் தூளாக 
பறவை கூட்டில் விண்மீன் பூக்க..
வாராத மாமணியாய்..
வந்தாயே உய்வாக..
மனசெல்லாம் ஒளி வீச..
உன் மீசை கூட மழலை பேச..

சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ..
கருவறை மீண்டும் மணக்கிறதோ..
எட்டு வைத்து வானம் வருகிறதோ..
தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ..

ஆண்: மழை பொழிகிற இரண்டாம் நாளில் விழும் துளியில் மாசில்லை..
இது ஒரு வகை இரண்டாம் பிறவி வாழ்வில் இனிமேல் குறையில்லை..
யுத்தம் புரிகிற மண்ணில் மண்ணில் இரத்த பந்தம் போல் பலமில்லை..
வா எழுந்திடு வாள் சுழற்றிடு வான் கிழித்திடு பயமில்லை..
கீச்சை மறந்து போன கிளியின் மௌனம் போல..
இதயம் தவித்த போது நீ இசையாய் உள்ளே வந்தாயே..

உறவெல்லாம் ஒன்றாக..
விழியெல்லாம் தேனாக..
இருளெல்லாம் தூளாக 
பறவை கூட்டில் விண்மீன் பூக்க..

தோழி உனை பார்த்ததும் நேற்றென் முகம் யோசனை..
ரெட்டை ஜடை வாசனை நீதானா நிஜம்தானா..
வயதின் முதல் காதலா..
வார்த்தை இல்லா வெய்யிலா..
சாட்சி இல்லா சாரலா நீதானா நிஜம்தானா..
அடி ஏதும் அறியா என் நெஞ்சில் இறகாக விழுந்தாயே..
காலம் பருவம் கடந்தாலும் கலையாமல் நின்றாயே..
போவோம் பல நாட்கள் பின்னே பின்னே..
வாழ்வோம் நாம் வளராத பிள்ளை போலே..

பெண்: சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ..
கருவறை மீண்டும் மணக்கிறதோ..
எட்டு வைத்து வானம் வருகிறதோ..
தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ..